Claim: நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
Fact: வைரலாகும் நியூஸ்கார்டினை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை. அது போலியாக பரவுகிறது.
நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
“நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்” என்று இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்ததா பாஜக?
Fact Check/Verification
நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் ஜூனியர் விகடன் பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், “நாங்கள் எந்த சின்னத்தை கேட்டாலும், அதை வேறு கட்சிகளுக்கு கொடுத்துவிடுகிறார்கள்! – சீமான்” என்று நியூஸ்கார்ட் ஒன்று வெளியாகியிருந்தது.
குறிப்பிட்ட நியூஸ்கார்டை எடுத்தே வைரலாகும் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியாகியது. மேலும், இதுகுறித்து ஜூனியர் விகடன் துணை நிர்வாக ஆசிரியர் பிரிட்டோவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டு பரவுகிறது” என்று விளக்கமளித்தார்.


மேலும், வைரலாகும் நியூஸ்கார்ட் மற்றும் செய்தி போலியானது என்று நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
Also Read: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதா?
Conclusion
நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
Phone Conversation with, I.Britto, Deputy Executive Editor, Junior Vikatan, Dated March 22, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)