சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Check‘தமில்நாடு’, ‘தமிலகம்’ என எழுத்துப்பிழையுடன் டீ-சர்ட் வெளியிட்டதா திமுக?

‘தமில்நாடு’, ‘தமிலகம்’ என எழுத்துப்பிழையுடன் டீ-சர்ட் வெளியிட்டதா திமுக?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமில்நாடு, தமிலகம் என எழுத்துப்பிழையுடன் டீ-சர்ட் வெளியிட்டது திமுக.

Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

சமூக வலைத்தளங்களில் வெள்ளை நிற டீ-சர்ட் ஒன்றின் படம் ஒன்று பரவி வருகின்றது. அந்த டீ-சர்ட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் “‘தமில்நாட்டிலும் திமுக ஆச்சி’, ‘தமிலகத்திலும் திமுக ஆச்சி’” என்கிற எழுத்துப்பிழையுடைய வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.

தமில்நாடு, தமிலகம் என எழுத்துப்பிழையுடன் திமுக டீ-சர்ட் வெளியிட்டதாக வைரலாகும் படம்

இப்படத்தை பலரும் பகிர்ந்து திமுகவை விமர்சித்து வருகின்றனர்.

தமில்நாடு, தமிலகம் என எழுத்துப்பிழையுடன் திமுக டீ-சர்ட் வெளியிட்டதாக வைரலாகும் படம்

X Link | Archive Link

தமில்நாடு, தமிலகம் என எழுத்துப்பிழையுடன் திமுக டீ-சர்ட் வெளியிட்டதாக வைரலாகும் படம்

Facebook Link

தமில்நாடு, தமிலகம் என எழுத்துப்பிழையுடன் திமுக டீ-சர்ட் வெளியிட்டதாக வைரலாகும் படம்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் பஞ்சாப் வன்முறை வீடியோ!

Fact Check/Verification

தமில்நாடு, தமிலகம் என எழுத்துப்பிழையுடன் திமுக டீ-சர்ட் வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில்  கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி,Tamil Nadu ‘s response to Hindi imposition ‘I am a Tamil Speaking Indian’ Well said!” என்று தலைப்பிட்டு வெள்ளை நிற டீ-சர்ட் ஒன்றின் புகைப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் செப்டம்பர் 06, 2020 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

ஆனால் ஜோதிமணி பதிவிட்ட டீ-சர்ட்டில் திருவள்ளுவர் படத்துடன்” l am a தமிழ் பேசும் indian” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இப்படத்தை  வைரலாகும் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், இப்படத்தை எடிட் செய்தே வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.  வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

தொடர்ந்து தேடுகையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் ஜோதிமணி பகிர்ந்த அதே டீ-சர்ட்டை அணிந்து, அதை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

 Also Read: குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் கேரளா வீடியோ!

Conclusion

தமில்நாடு, தமிலகம் என எழுத்துப்பிழையுடன் திமுக டீ-சர்ட் வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படமாகும். உண்மையில் அந்த டீ சர்ட்டில் திருவள்ளுவர் படத்துடன்” l am a தமிழ் பேசும் indian” என்ற வாசகமே இடம்பெற்றிருந்தது.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from Jothimani, MP of Karur, Dated September 06, 2020

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular