Friday, December 5, 2025

Fact Check

Fact Check: மாம்பழங்களை சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்தால் இறப்பு ஏற்படுமா?

banner_image

Claim:  மாம்பழம் சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்தால் மரணம்
Fact: வைரலாகும் தகவல் தவறானது; ஆதாரமற்றது ஆகும்.

மாம்பழங்களை சாப்பிட்டுவிட்டு குளிர்பான குடித்தால் இறப்பு ஏற்படும் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

”ஒரு சின்ன எச்சரிக்கை மாம்பழங்களைச் சாப்பிடுங்கள், குளிர் பானங்கள் குடிக்காதீர்கள்! சில சுற்றுலாப் பயணிகள் சண்டிகருக்குச் சென்றனர். மாம்பழத்தை சாப்பிட்ட உடனே குளிர்பானத்தை குடித்தார். அவர்கள் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் மயக்கம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மாம்பழம் சாப்பிட்ட பிறகு குளிர்பானமோ, குளிர்பானமோ அருந்தக் கூடாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாம்பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலமும், குளிர்பானத்தில் உள்ள ஆர்கானிக் அமிலமும் சேர்ந்து விஷமாகிறது.” என்பதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து, நம்முடைய வாசகர்களும் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Screenshot from Facebook/thinamoruthagavalcom

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தியப் பிரதமராக ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு என்று பரவும் பழைய கருத்துக்கணிப்பு!

Factcheck / Verification

மாம்பழங்களை சாப்பிட்டுவிட்டு குளிர்பான குடித்தால் இறப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முதலாவதாக, சண்டிகரில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதாக வைரல் பதிவில் இருப்பதைத் தொடர்ந்து அப்படி நிகழ்வு ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்று கீ-வேர்டுகளால் தேடினோம்.

ஆனால், செய்திகளில் அப்படி சண்டிகர் சுற்றுலாப்பயணிகள் மாம்பழம் சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்ததால் இறந்ததாக தகவல் எதுவும் பதிவாகியிருக்கவில்லை. மேலும், கடந்த சில வருடங்களாகவே இந்த வைரல் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருவதும் தெரிய வந்தது.

தொடர்ந்து இதுகுறித்து தேடியபோது, கடந்த 2019 ஆம் ஆண்டு, Frontiers வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், “Mango contains organic acids like malic and citric acid, which are the main reason for the sourness of mango fruit.” என்று மாம்பழத்தில் உள்ள ரசாயன பண்புகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

National Library of Medicine வெளியிட்டுள்ள மற்றொரு கட்டுரையில் மாம்பழத்தில் உள்ள சத்துகள் மற்றும் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்பானங்களில் உள்ள கார்போனிக் அமிலம், குளிர்பான பாட்டிலை திறந்தவுடனேயே சிதைந்துவிடும் என்று பிரிட்டானிகாவின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாம்பழம் மற்றும் குளிர்பானத்தில் உள்ள ரசாயனங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து ஆராய்ந்தோம். அதற்குமுன்பு, Thoughtco ஜனவரி 29, 2020ல் பகிர்ந்திருந்த கட்டுரை ஒன்றில் பலவீனமான அமிலங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “a weak acid is an acid that is partially soluble in water or ions in an aqueous solution. Citric and carbonic acid are two such weak acids. Generally, two weak acids with similar dissociation constants coexist in solution without much interaction. They have similar dissociation constants in water.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, KLE மருத்துவமனையின் மருத்துவர் மாதவ் பிரபுவை தொடர்பு கொண்டு பேசியபோது, “இதுபோன்று நிகழ்ந்ததாக இதுவரை எந்த செய்தியும் வந்ததில்லை. மாம்பழம் மற்றும் குளிர்பானம் இரண்டில் இருக்கும் பொருட்களும் மரணத்தை விளைவிக்காது.” என்று விளக்கமளித்தார்.

தொடர்ந்து, இதுகுறித்து கடந்த 2022ஆம் ஆண்டே யசோதா மருத்துவமனை மருத்துவர் ஸ்ருத்திகா ஷிங்காரா என்பவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். அதில் அவர், “சிட்ரிக் அமிலம் மாம்பழத்தில் மிக குறைந்த அளவே இருக்கும். குளிர்பானத்தில் இருக்கும் கார்போனிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் இரண்டுமே உடலில் கவலைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்தாது. ஆனால், தினசரி கார்போனேட் பானங்களை எடுத்துக் கொண்டால் அவை அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தலாம்” என்று விளக்கமளித்துள்ளார்.

இந்த வைரல் பதிவு குறித்து மேலும் அறிந்துகொள்ள, ராஜேஸ்வரி ஷில்கே என்னும் ஊட்டச்சத்து நிபுணரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “சிட்ரிக் அமிலம் அல்லது கார்போனிக் அமிலம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் ஏற்படலாம். ஆனால், அவற்றால் உடனடி மரணம் என்பதெல்லாம் வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.

Also Read: Fact Check: 1971ல் வங்கதேச சுதந்திர போரில் பங்குப்பெற்ற பெண்களின் படம் என்று பரவும் படம்!

Conclusion

மாம்பழங்களை சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்தால் இறப்பு ஏற்படும் என்று பரவுகின்ற தகவல் தவறானது; ஆதாரமின்றி பரவுகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Article published by Frontire on October 17, 2019

Article published by National Library of Medicine on October 17, 2019

Article published by Britannica on February 14, 2023

Article published by ThoughtCo on January 29, 2020

Conversation with Dr. Madhav Prabhu, KLE Hospital

Conversation with Dr. Shrutika Shingaare, Yashoda Hospital

Conversation with Rajeshwari Shelake, Dietitian


(இந்த தகவலானது  முதலில் நியூஸ்செக்கர் மாரத்தியில் ஆய்வு செய்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது)


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,439

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage