Fact Check
தவெகவில் இணையத் தயார் என்று ஜி.கே.வாசன் கூறினாரா?
Claim
தவெகவில் இணையத் தயார் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டு.
Fact
சமூக வலைதளங்களில் ஆபாச படங்கள் வெளியாவதை தடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்திருந்தார். இதுக்குறித்து வெளியிடப்பட்ட நியூஸ்கார்டே எடிட் செய்யப்பட்டு இவ்வாறு பரப்பப்படுகின்றது.
துணைத்தலைவர் பதவி தந்தால் தவெகவில் இணையத் தயார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக தலைவர் விஜய் பனையூரில் பதுங்கியதாக விமர்சனம் செய்தாரா நடிகர் சூரி?
Fact Check/Verification
தவெகவில் இணையத் தயார் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாகபரவும் நியூஸ்கார்டில் ‘துணைத்தலைவர்’, ‘இணைய’ ஆகிய இரு வார்த்தைகள் எழுத்துப்பிழையுடன் தவறாக இருப்பதை காண முடிந்தது.

அதேபோல் இந்த நியூஸ்கார்டில் காணப்பட்ட எழுத்துரு சன் நியூஸில் பயன்படுத்தப்படும் வழக்கமான எழுத்துருவிலிருந்து மாறுபட்டிருந்தது.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டது என உணர முடிந்தது.
இதனையடுத்து வைரலாகும் இத்தகவல் சன் நியூஸின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம்.
இத்தேடலில் சன் நியூஸ் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக சமூக வலைதளங்களில் ஆபாச படங்கள் வெளியாவதை தடுக்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்ததாக நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது

இந்த நியூஸ்கார்டை வைரலாகும் நியூஸ்கார்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்த கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.


இதனையடுத்து சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளர் மனோஜை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்பதை அவரும் உறுதி செய்தார்.
Also Read: விஜய் திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடியதாக பரவும் படம் உண்மையானதா?
Conclusion
தவெகவில் இணையத் தயார் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டானது எடிட் செய்யப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post by Sun News, dated August 14, 2025.
Phone conversation with Manoj, Sun News