வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்றாரா அண்ணாமலை?

ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்றார் அண்ணாமலை

Fact: இத்தகவல் தவறானது என்று பாஜக தரப்பும், கதிர் நியூஸ் தரப்பும் தெளிவு செய்துள்ளது.

“ஆளுநர்களும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசினால் பிறகு மாநில பாஜக எதற்கு? என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கேட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

Twitter Link | Archived Link

ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

Archived Link

ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டிருந்த தேதியில் (22/12/2023) அண்ணாமலை கொடுத்த பத்திரிக்கையாளர் சந்திப்பானது அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது. அந்த வீடியோவை முழுமையாக ஆராய்ந்ததில் இவ்வாறு ஒரு கருத்தை அவர் தெரிவித்திருக்கவில்லை என அறிய முடிந்தது.

இதனையடுத்து தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவரும் இத்தகவல் பொய்யானது“ என்று உறுதி செய்தார்

இதனை தொடர்ந்து வைரலாகும் நியூஸ்கார்டானது கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் கதிர் நியூஸும் இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.

இதனையடுத்து கதிர் நியூஸின் ஆசிரியர் பிரதீப் குமாரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை கதிர் நியூஸ் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with S.G.Suryah, State Secretary, Tamilnadu BJP
Phone Conversation with Pradeep Kumar, Editor, Kathir News

Youtube Video from Annamalai, Dated December 22, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular