வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை ஒருவர் திருமணத்தை நிறுத்தியதாக வீடியோ ஒன்று ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வரதட்சணை பாக்கி வைத்ததால் திருமண மேடையிலேயே திருமணத்தை நிறுத்தியதாக வீடியோ ஒன்றை பாலிமர் நியூஸ் மற்றும் பிஹைண்ட்வுட்ஸ் வெளியிட்டுள்ளது.


Also Read: விசிக தலைவர் திருமாவளவனிடம் சால்வையை வாங்கி கீழே வைத்தாரா முதல்வர் ஸ்டாலின்?
ஊடகங்கள் வெளியிட்ட இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்தியதாக வீடியோ ஒன்றை ஊடகங்கள் வெளியிட்டதால் இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
ஊடகங்கள் வெளியிட்ட வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். இதில் ஊடகங்கள் வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்றிருந்த நிகழ்வு உண்மையானது அல்ல, அது கற்பனையாக சித்தரிக்கப்பட்ட நிகழ்வு என்பதை அறிய முடிந்தது.
திவ்யா விக்ரம் (Divya Vikram) எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் மேற்காணும் வீடியோ கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த பக்கத்தில் இதுபோன்று புனையப்பட்ட விழிப்புணர்வு மற்றும் நகைச்சுவை வீடியோக்கள் பலவற்றை காண முடிந்தது.

இதேபோல் ஊடகங்கள் வெளியிட்ட வீடியோவில் இருந்த அதே ஜோடி வேறு ஒரு கதையில் நடித்திருந்த வீடியோவையும் இப்பக்கத்தில் காண முடிந்தது.
Also Read: கோகுல்ராஜ் வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜை குற்றமற்றவர் என்றாரா அண்ணாமலை?
Conclusion
நமது ஆய்வின் மூலம் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்தும் நிகழ்வு கற்பனையாக சித்தரிக்கப்பட்டதாகும். இதனை உண்மையான நிகழ்வென்று நம்பி, ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Sources
Divya Vikaram Page Videos
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)