ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkதமிழக அரசின் சிறந்த இயக்குநர் விருதை துணிவு படத்திற்காகப் பெற்றாரா இயக்குநர் வினோத்?

தமிழக அரசின் சிறந்த இயக்குநர் விருதை துணிவு படத்திற்காகப் பெற்றாரா இயக்குநர் வினோத்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஹெச்.வினோத்திற்கு துணிவு படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது
Fact: இத்தகவல் தவறானதாகும். 2022ஆம் ஆண்டு அவருக்கு சிறந்த கதையாசிரியர் விருது வழங்கிய நிகழ்வு இது.

தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதினை துணிவு படத்திற்காக வென்ற இயக்குநர் வினோத் என்று புகைப்படத்தகவல் ஒன்று பரவி வருகிறது.

”துணிவு படத்தை இயக்கிய ஹெச் வினோத் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டது ” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது.

தமிழக அரசின்
Screenshot from X @AJITH__AFC

Archived Link

Screenshot from x @sulthan2022

Archived Link

Screenshot from X @vijilpaul

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து சீர்வரிசை என்று பரவும் நொய்டா வீடியோ!

Fact Check/Verification

தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதை நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய துணிவு படத்திற்காக வாங்கிய இயக்குநர் வினோத் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற “தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா” நிகழ்வின்போது வெளியாகிய Behindwoods வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது என்பது அதிலிருந்த லோகோவின் மூலமாக உறுதியாகியது.

தொடர்ந்து, அந்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் கண்டறிந்து ஆராய்ந்தபோது அந்த வீடியோவில் சரியாக 1:25:51ல் இடம்பெற்றிருந்த காட்சியின் மூலமாக அவ்விழாவில் இயக்குநர் ஹெச்.வினோத்திற்கு 2014ஆம் ஆண்டிற்கான சிறந்த கதையாசிரியருக்கான விருது ”சதுரங்கவேட்டை” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகியது.

குறிப்பிட்ட இடத்தில் கட் செய்து எடுத்து அதனை ஹெச்.வினோத் துணிவு படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றதாகப் பரப்பி வருகின்றனர் என்பது நமக்குத் தெளிவாகியது.

Also Read: அயோத்தியில் 25,000 ஹோமகுண்டங்கள் என்று பரவும் வாரணாசி வீடியோ!

Conclusion

 தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதை துணிவு படத்திற்காக வாங்கிய இயக்குநர் வினோத் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube Video from BehindwoodsTV, Dated September 04, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular