சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkசச்சின் தெண்டுல்கர் சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை விமர்சிக்கும் விதமாக விறகடுப்பில் சமைத்தாரா?

சச்சின் தெண்டுல்கர் சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை விமர்சிக்கும் விதமாக விறகடுப்பில் சமைத்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சிலிண்டர் விலையேற்றத்தை விமர்சிக்கும் விதமாக விறகடுப்பில் சமைத்தார் சச்சின் தெண்டுல்கர்
Fact: சச்சின் தனது 50 ஆவது பிறந்தநாளை கிராமத்தில் கொண்டாடியபோது  எடுக்கப்பட்ட படத்தை வைத்து தவறான தகவல் பரப்பப்படுகின்றது.

“2014-ல் 500 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர், இன்று 1120 ரூபாய்க்கு விற்கப்படுவதை விமர்சிக்கும் விதமாக, விறகடுப்பில் சமைத்து ஒன்றிய அரசிற்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார் சச்சின்!” என்று குறிப்பிட்டு சச்சின் தெண்டுல்கர் குடும்பத்துடன் விறகடுப்பில் சமைக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சச்சின் தெண்டுல்கர் சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை விமர்சிக்கும் விதமாக விறகு அடுப்பில் சமைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக வைரலாகும் தகவல்
Screenshot from Twitter@magizh
சச்சின் தெண்டுல்கர் சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை விமர்சிக்கும் விதமாக விறகு அடுப்பில் சமைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக வைரலாகும் தகவல்
Screenshot from Facebook / ganesh.prabhu.1004
சச்சின் தெண்டுல்கர் சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை விமர்சிக்கும் விதமாக விறகு அடுப்பில் சமைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக வைரலாகும் தகவல்
Screenshot from Facebook / ln.tramachandranyes

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்கியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டினாரா பிரதமர்?

Fact Check/Verification

சச்சின் தெண்டுல்கர் சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை விமர்சிக்கும் விதமாக விறகடுப்பில் சமைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, இப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் சச்சின் தெண்டுல்கர் அவரது 50-ஆவது பிறந்தநாளை பண்ணை வீடு ஒன்றில் கொண்டாடியதாக வைரலாகும் இப்படத்தை அவரது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

இதனடிப்படையில் காண்கையில் சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகின்றது.

Also Read: கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என NDTV கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Conclusion

சச்சின் தெண்டுல்கர் சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை விமர்சிக்கும் விதமாக விறகடுப்பில் சமைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook post, from Sachin Tendulkar, Dated May 05, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular