ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 6, 2024
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 6, 2024

HomeFact Checkகர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என NDTV கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என NDTV கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கர்நாடகா தேர்தல் கருத்துக்கணிப்பு காங்கிரஸ் அபார வெற்றி பெறும் வாய்ப்பு
Fact: வைரலாகும் கருத்துக்கணிப்பு NDTV பெயரில் போலியாக பரவுகிறது.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெறும் என்று NDTV கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கர்நாடகா

கர்நாடகா கருத்துக்கணிப்பு காங்கிரஸ் அபார வெற்றி பெறும் வாய்ப்பு” என்று இப்புகைப்படம் பரவி வருகிறது.

கர்நாடகா
Screenshot from Facebook/vincent.raja.5686

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: புற்றுநோயால் இறந்த ஃபேஷன் டிசைனர் என்று சோனாலி பிந்த்ரேவின் படத்தை பரப்பும் இணையவாசிகள்! 

Fact Check/Verification

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி என்று NDTV கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவுகின்ற புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வருகின்ற மே 10ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியிடையே தேர்தல் களத்தில் பெரும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையிலேயே, காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் மாபெரும் வெற்றி பெறும் என்று NDTV கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளதாகப் புகைப்படம் பரவிய நிலையில், NDTV அப்படி ஏதேனும் வெளியிட்டுள்ளதா என்று கீ-வேர்ட் மூலமாகத் தேடினோம். ஆனால், NDTV அவ்வாறு கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளதாக செய்தி எதுவும் வெளியாகியிருக்கவில்லை.

தொடர்ந்து, அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தபோது, ”நாங்கள் வெளியிட்டதாகப் பரவும் இந்த கருத்துக்கணிப்பு புகைப்படம் போலியானது” என்று விளக்கமளித்துள்ளனர். மேலும், NDTVயின் உண்மையான கருத்துக்கணிப்பு மே 10ஆம் தேதி மாலை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  ‘ABP-CVoter’, ‘Eedina’, ‘TV9 Kannada’, ‘C-Daily Tracker’ மற்றும் ‘Lok Pol’ ஆகியோர் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் RSS மற்றும் State Intelligence bureau கருத்துக்கணிப்புகள் எதுவும் வெளியிட்டுருக்கவில்லை. எனவே, NDTV பெயரில் பரவும் புகைப்படம் போலியானது என்பது மேலும் தெளிவாகிறது.

Also Read: Fact Check: பாகிஸ்தானில் இறந்த மகள்கள் சமாதிக்கு பூட்டு போடும் பெற்றோர் எனப் பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி என்று NDTV கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவுகின்ற புகைப்படம் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from NDTV, dated May 03, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular