Fact Check
சிந்து நதி விவகாரத்தில் பாகிஸ்தானை கிண்டல் செய்தாரா டிரம்ப்?
Claim
சிந்து நதி விவகாரத்தில் பாகிஸ்தானை கிண்டல் செய்தார் டிரம்ப்.
Fact
இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ 9 ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோவாகும். தற்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளராக இருக்கும் மார்க்கோ ரூபியோவை கிண்டலடித்த அச்சமயத்தில் டிரம்ப் இச்செயலை செய்தார்.
“இந்த டிரம்ப் இருக்காரே… நக்கல் புடிச்ச மனுஷன்.. பாக்கிஸ்தான் சிந்து தண்ணீர் வேணும்னு அமெரிக்கா கிட்ட கெஞ்சியதை எப்பிடி நக்கல் பன்றார் பாருங்க மக்களே… நமது பிரதமரின் வலிமை இப்ப தெரியுதா” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நடிகர் அஜித்தை நேரில் அழைத்து கெளரவித்த பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
சிந்து நதி விவகாரத்தில் பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலடித்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி படங்களாக பிரித்து, அவற்றை கூகுள் லென்ஸ் உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் “Trump mocks Rubio’s SOTU water incident” என்று தலைப்பிட்டு நவம்பர் 27, 2016 அன்று CNN ஊடகம் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றை காண முடிந்தது. அதில் வைரலாகும் வீடியோவில் இருப்பதுபோல் தற்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளராக இருக்கும் மார்க்கோ ரூபியோவை டிரம்ப் கிண்டலடித்து பேசுவதை காண முடிந்தது.

வேறு சில ஊடகங்களும் அச்சமயத்தில் இதுக்குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
2013 ஆம் ஆண்டில் ரூபியோ பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது இடையில் நிறுத்தி, தண்ணீர் குடித்துவிட்டு, மீண்டும் உரையை தொடர்ந்தார்.
இந்த நிகழ்வையே டிரம்ப் கிண்டலடித்திருந்தார்.
இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் தற்போதைய சிந்துநதி விவகாரத்திற்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது.
இதனையடுத்து சிந்துநதி விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை நாடியதா என தேடினோம். அதில் பாகிஸ்தான் அமெரிக்காவிடம் உதவி கேட்டதாக எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.
மாறாக அமெரிக்கா இந்தியா, மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேசவிருப்பதாக செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது.
Also Read: பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 15 பேர் இஸ்லாமியர்கள் என்று பரவும் அட்டவணை உண்மையா?
Conclusion
சிந்து நதி விவகாரத்தில் பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலடித்ததாக பரவும் வீடியோ தவறானதாகும். வைரலாகும் வீடியோ 9 ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோவாகும். தற்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளராக இருக்கும் மார்க்கோ ரூபியோவை கிண்டலடித்த அச்சமயத்தில் டிரம்ப் இச்செயலை செய்தார்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from CNN, Dated February 27, 2016
Report from NBC News, Dated February 27, 2016
Report from Time, Dated February 26, 2016
Report from CBS News, Dated February 27, 2016