Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றுள்ளது
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்
நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் டிப்லைன் எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரித்திருந்தார்.
அப்புகைப்படத்தில் ‘தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவர் படம் இருக்கா_ இல்லையான்னு தெரியல… ஆனால் ரஷ்ய நாடாளுமன்ற அலுவலகத்தில் காமராஜர் ஐயா படம் உள்ளது’ என்று குறிப்பிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் அறையில் கர்ம வீரர் காமராஜர் புகைப்படம் இடம்பெற்றிருப்பதாக இருந்தது.
தொடர்ந்து தேடுகையில் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Factcheck / Verification
ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, அப்படத்தின் உண்மை பின்னணி குறித்து அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெரிய வந்தது. காமராஜர் தவிர்த்து வேறு சில புகைப்படங்களுடன் இதே புகைப்படம் எடிட் செய்யப்பட்டு பல்வேறு இணையத்தளங்களில் பகிர்ந்திருப்பதை நம்மால் காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் alamy இணையத்தளத்தில் “Russian President Vladimir Putin holding conference on economic issues in the Kremlin From left to right Sergei Ignatyev” என்று தலைப்பிட்டு புகைப்படம் ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்புகைப்படத்தை உற்று நோக்கியதில் வைரலாகும் படமும் அப்படமும் ஒரே படம் என்பதை அறிய முடிந்தது.
Alamy தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த படத்தில் காமராஜர் படம் இடம்பெற்றிருந்த இடத்தில், உண்மையில் ரஷ்யாவின் அடையாள சின்னம் இடம்பெற்றிருந்தது.
Also Read: என் வாழ்க்கையை அழித்தது ரஜினிதான் என்று மனீஷா கொய்ராலா கூறியதாக பொய் செய்தி!
Conclusion
ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றுள்ளதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Photo
Our Sources
Alamy Image
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.