ஞாயிற்றுக்கிழமை, மே 5, 2024
ஞாயிற்றுக்கிழமை, மே 5, 2024

HomeFact Checkகேரளாவில் ராகுல் காந்தி பங்கேற்ற ரோடு ஷோவில் முஸ்லீம் லீக் கொடிகள் என்று பரவும் 2016ஆம்...

கேரளாவில் ராகுல் காந்தி பங்கேற்ற ரோடு ஷோவில் முஸ்லீம் லீக் கொடிகள் என்று பரவும் 2016ஆம் ஆண்டு புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இது கேரளாவின் வயநாட்டில் ராகுல் பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி
Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு முஸ்லீம் லீக்கின் கேரளா யாத்ரா நிகழ்வில் எடுக்கப்பட்டதாகும்.

கேரளாவில் ராகுல் காந்தி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் முஸ்லீம் லீக் கொடிகள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“இது ஏதோ இஸ்லாமிய மக்களின் பேரணின்னு தானே நினைச்சீங்க..அதுதான் இல்லை, இது கேரளாவின் வயநாட்டில் ராகுல் பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி.இதுல ரொம்ப வருத்தமான விஷயம் என்னன்னா ராகுல் கையிலும் முஸ்லீம் லீக் கொடி. இதை கேட்கும் போதே அதிர்ச்சியின் உச்சத்தில் ஒரு கணம் சிந்தனை செயலற்று நின்று விடுகிறது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தேசிய கொடியை ஒத்த ஒரு கொடியையே இவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என்றால் தேசிய கொடியின் மீது இவர்களுக்கு எவ்வளவு வன்மம் இருக்கும்? யோசிக்கும் போதே விக்கித்து போகிறது அல்லவா? கொடியை காக்க உயிரை விட்ட திருப்பூர் குமரன் வாழ்ந்த இந்த மண்ணில் தேசிய கொடிக்கு இந்த நிலைமையா? இறைவா நீதான் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றணும்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.

கேரளாவில் ராகுல் காந்தி
Screenshot from x @SSR_Sivaraj

X Link/Archived Link

Screenshot from x @rnsaai

X Link

Screenshot from x @Lalitha19010440

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா நடிகர் அல்லு அர்ஜுன்?

Fact Check/Verification

கேரளாவில் ராகுல் காந்தி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் முஸ்லீம் லீக் கொடிகள் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு முஸ்லீம் லீக் குறித்த செய்திகளில் உபயோகிக்கப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

தொடர்ந்து, நம்முடைய தேடலில் அப்புகைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு India Today செய்தி ஊடகத்தில் “A minority that matters” என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்த கட்டுரையில் உபயோகிக்கப்பட்டிருந்தது.

அக்கட்டுரையில், குறிப்பிட்ட புகைப்படம் ” PK Kunhalikutty’s Kerala yathra at Kozhikode on January 30, 2016. Photo: T Mohandas” என்ற நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்புகைப்படமே தற்போது ராகுல் காந்தியின் கேரளா ரோடு ஷோவில் எடுக்கப்பட்டது என்று பரவி வருவது நமக்கு உறுதியாகியது. இந்நிகழ்வு குறித்தே மேலும் செய்திகளை இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.

மேலும், ராகுல் காந்தியின் ரோடு ஷோ நிகழ்வில் முஸ்லீம் லீக் கொடிகள் உபயோகிக்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. டைனிக் பாஸ்கர் உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளன. ராகுல் காந்தியின் வயநாடு ரோடு ஷோ நிகழ்ச்சியின் வீடியோக்கள் பல்வேறு ஊடகங்களிலும் இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பது போன்று முஸ்லீம் லீக் கொடிகள் மட்டும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறுவது தவறானது என்பது உறுதியாகிறது.

 Also Read: உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்ததா?

Conclusion

கேரளாவில் ராகுல் காந்தி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் முஸ்லீம் லீக் கொடிகள் என்று பரவும் புகைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
News Report From, India Today, Dated May 06, 2016
YouTube video From, Economic Times, Dated April 15, 2024



(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular