சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkசார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் புனைவு வீடியோ!

சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் புனைவு வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் வீடியோ.

Fact: வைரலாகும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும்.

“பெரிய தொழில் அதிபர், ரொம்ப பிசியா உள்ள நபர், செல்போனில் பேசியபடி சார்ஜர் போட்டுக் கொண்டு தண்ணீர் அருந்தியதால் மூளை செயலிழந்து இறந்துவிட்டார். நம்மில் பலர் இது போன்ற தவறை செய்கிறோம். விழிப்போடு இருப்போம். நம் உயிர் காப்போம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் வீடியோ

X Link | Archived Link

சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் வீடியோ

Facebook Link

சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் வீடியோ

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விவசாயிகள் போராட்டக்களத்தில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவதாகப் பரவும் தவறான வீடியோ செய்தி!

Fact Check/Verification

சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனையும், நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோவை பிப்ரவரி 02, 2020 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

ஜுவாலா கட்டா பகிர்ந்திருந்த இவ்வீடியோவில் இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதை அவர் தெளிவுப்படுத்தி இருப்பதையும் காண முடிந்தது.

சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் வீடியோ

தொடர்ந்து தேடுகையில் ஜுவாலா கட்டா இதுபோன்று பல விழிப்புணர்வு வீடியோக்களை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் வீடியோ

இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு உண்மையானது அல்ல; அது ஒரு சித்தரிக்கப்பட்ட நிகழ்வு என தெளிவாகின்றது.

 Also Read: மனித முகத்துடன் கராஞ்சியின் சம்சாரா ஏரியில் காணப்படும் மீன்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Conclusion

சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Facebook Post from Jwala Gutta, Dated February 02, 2020

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular