பொது இடங்களில் நாகரிகம் இல்லாமல் நடக்கும் இஸ்லாமியர்கள் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“அப்துல் கலாம் மட்டும் எப்படி தான் இந்த கும்பலுக்கு நடுவுல மனுஷனா பிறந்தாரோ??” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சாட்டை துரைமுருகன் பெண் ஒருவருடன் நடனம் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
பொது இடங்களில் நாகரிகம் இல்லாமல் நடக்கும் இஸ்லாமியர்கள் என்பதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அது பற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ”Ayaan Bro” என்கிற யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. இதுமட்டுமின்றி, இதே போன்றே நகைச்சுவையாக உணவு சம்பந்தப்பட்ட பல்வேறு வீடியோக்கள் இடம்பெற்றிருந்தது.
குறிப்பிட்ட யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள வீடியோவே இஸ்லாமியர்கள் பொது இடங்களில் நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வதாகப் பரவி வருகிறது.
Also Read: எம்ஜிஆர் முகத்தோற்றத்தையுடைய வெளிநாட்டவர் என்று பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
பொது இடங்களில் நாகரிகம் இல்லாமல் நடக்கும் இஸ்லாமியர்கள் என்பதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, Ayaan Bro, Dated April 28, 2025