Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையெனில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், “நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையெனில் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கூட தயங்க மாட்டேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Also Read: கர்நாடகாவில் ‘அல்லாஹூ அக்பர்’ கோஷமிட்டு வைரலான மாணவியின் புகைப்படமா இது? உண்மை என்ன?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையெனில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
சன் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால் இந்த நியூஸ்கார்டை சன் நியூஸ் வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
“நீட் தேர்வு தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமாகிறது; ஏழை மாணவர்களை கொல்லக்கூடியது. மாணவர்களின் மருத்துவக் கனவில் தடுப்புச் சுவரை எழுப்புகிறது நீட்” என்று முதல்வர் பேசியதாக சன் நியூஸ் கடந்த செவ்வாயன்று ( 08/02/2022) நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்து வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனையடுத்து சன் நியூஸின் டிஜிட்டல் தலைவர் மனோஜைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அவரும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதுதான் என்பதை உறுதி செய்தார்.
இதன்பின் தி.மு.க இணை செய்தித் தொடர்பாளரான பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். இதற்கு அவர்,
“இது முற்றிலும் பொய்யான செய்தி. முதல்வர் இவ்வாறு பேசவே இல்லை.”
என்று விளக்கமளித்தார்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையெனில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானதாகும்.
இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Manoj, Digital Head, Sun News
Constandine Ravindran, Joint Spokes Person, DMK
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
November 10, 2021
Vijayalakshmi Balasubramaniyan
August 29, 2024
Ramkumar Kaliamurthy
January 3, 2024