ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckNewsதுபாயில் ஒரு மாவட்டத்திற்கு இந்து மதத்தை கெளரவிக்கும் வகையில் ஹிந்த் சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ளதா?

துபாயில் ஒரு மாவட்டத்திற்கு இந்து மதத்தை கெளரவிக்கும் வகையில் ஹிந்த் சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ளதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

துபாயில் ஒரு மாவட்டத்திற்கு இந்து மதத்தை கெளரவிக்கும் வகையில் ஹிந்த் சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot From Facebook/padmanabhan.nagarajan.37

“துபாயில் ஒரு மாவட்டம் “ஹிந்த் சிட்டி” என்று பெயரிடப்பட்டுள்ளது! இந்தியா மற்றும் இந்து மதம் உலகுக்கு அளித்த உன்னதமான கொடைகளை நினைவுகூறும் வகையில் இந்த பெயர் மாற்றம் என்கிறார் UAE பிரதமர். மொகல் தோட்டம் பெயர் மாற்றம் குறித்து வயறு எரிந்தவர்களுக்கு இலவசமாக ஜெலூசில்” என்பதாக இந்த செய்தி பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக பழைய வீடியோவை வெளியிட்ட அதிமுக கோவை சத்யன்! 

Fact Check / Verification

துபாயில் ஒரு மாவட்டத்திற்கு இந்து மதத்தை கெளரவிக்கும் வகையில் ஹிந்த் சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ளதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

துபாய் மாவட்டத்திற்கு உண்மையில் ஹிந்த் சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்தபோது ஜனவரி 29, 2023 அன்று துபாய் மன்னரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணை அதிபரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், துபாயின் மின்ஹாத் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஹிந்த் சிட்டி என்று பெயரிட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.

துபாயின் அதிகாரப்பூர்வ செய்தி இணையதளப் பக்கத்திலும் “ஹிந்த் சிட்டி” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்ததே தவிர இந்தியாவிற்கும் அதற்கும் சம்பந்தம் இருப்பதாக எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

மேலும், இதுகுறித்து கல்ஃப் இன்சைடரில் வெளியாகியிருக்கும் செய்தில் ஹிந்த் என்றால், “100 ஒட்டகங்கள்” என்றும், அரேபியர்களின் பெண்களுக்கான பாரம்பரியமான பெயர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் மன்னரின் மூத்த மனைவியின் பெயர் Hind bint Maktoum bin Juma Al Maktoum என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக வெளியான சில பழைய செய்திகளிலும் அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. Metro.co.uk என்கிற செய்தித்தளத்தில் வெளியான துபாய் ஆட்சியாளரின் மனைவிகள் குறித்த கட்டுரையில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து, இதுகுறித்து வெளியான துபாய் செய்தித்தளங்கள் எதிலும் பெயர் மாற்றத்திற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் எதுவும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஹிந்த் சிட்டி என்று பெயர் மாற்றப்பட்டது குறித்த செய்திகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.

Also Read:  உ.பி.யில் தலித் பெண் ஆற்றில் குளித்ததால் பாஜகவினர் அவரை தாக்கினரா?

Conclusion

துபாயில் ஒரு மாவட்டத்திற்கு இந்து மதத்தை கெளரவிக்கும் வகையில் ஹிந்த் சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ளதாகப் பரவுகின்ற செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Sources
News Report From, Government of Dubai Media, Dated January 29, 2023

News Report From, Gulf Insider
News Report From, Metro.co.UK, Dated February 19, 2021


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular