குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தீவிர சைவ உணர்வாளர். வெங்காயம், பூண்டு கூட உணவில் சேர்த்துக் கொள்ளாதவர். எனவே அசைவ உணவு மற்றும் மது போன்றவற்றுக்கு ஜனாதிபதி மாளிகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்ணை கண்டு மருத்துவர் கண்ணீர் சிந்தியதாக பரவும் தகவல் உண்மையானதா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக குடியரசுத் தலைவர் முர்மு சைவ உணவுப் பழக்கம் உடையவரா என்பதை உறுதி செய்ய இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் முர்மு சைவ உணவுப் பழக்கம் உடையவர் என்றும், வெங்காயம், பூண்டு கூட உணவில் சேர்த்துக் கொள்ள மாட்டார் என்றும் ஊடங்களில் வந்த செய்திகளை காண முடிந்தது.
ஊடகங்களில் வந்த செய்தியை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து குடியரசு தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தேடினோம். இதில் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று the Press Information Bureau (PIB) தெளிவு செய்துள்ளதை காண முடிந்தது.
இதனையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையின் மக்கள் தொடர்பு அதிகாரியை நியூஸ்செக்கர் தரப்பிலிருந்து தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து தெளிவு பெற முயற்சித்தோம். ஆனால் இதுவரை நமக்கு அவர்களிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. எதிர்காலத்தில் அவர்களிடமிர்ந்து பதில் வரும் பட்சத்தில் அதை இக்கட்டுரையில் இணைப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Conclusion
குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
(இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது)
Result: False
Sources
PIB Tweet
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)