நாம் தமிழர் கட்சியில் பாலியல் இழப்பீடு பாசறை என புதிய பாசறை தொடங்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
நாதகவில் பாலியல் இழப்பீடு பாசறை என புதிய பாசறை தொடங்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, நாதகவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
அதில் மகளிர் பாசறை, இளைஞர் பாசறை, மருத்துவப் பாசறை, வழக்கறிஞர் பாசறை, குருதிக்கொடைப் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பாசறை, தமிழ் மீட்சிப் பாசறை, கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை ஆகிய எட்டு பாசறைகளை நாதகவில் இருப்பதாக தெரிவிக்கபட்டிருந்தது.

இதுத்தவிர்த்து பாலியல் இழப்பீடு பாசறை என ஒரு பாசறை இருப்பதாக எவ்வித தகவலும் இடம்பெற்றிருக்கவில்லை.
இதனையடுத்து நாதக செய்தித் தொடர்பாளர் செ.பாக்கியராசனை தொடர்புக்கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் பொய்யானது; அவ்வாறு ஒரு பாசறை நாதகவில் இல்லை என்று உறுதி செய்தார்.
Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா?
Conclusion
நாதகவில் பாலியல் இழப்பீடு பாசறை என புதிய பாசறை தொடங்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with Pakkiaraj, Spokesperson, NTK
Naam Tamilar Katchi Website