சனிக்கிழமை, ஜூலை 13, 2024
சனிக்கிழமை, ஜூலை 13, 2024

HomeFact Checkஎலான் மஸ்க் காவி உடை அணிந்திருப்பதாகப் பரவும் AI புகைப்படம்!

எலான் மஸ்க் காவி உடை அணிந்திருப்பதாகப் பரவும் AI புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: காவி உடையில் ட்விட்டர் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் 

Fact: வைரலாகும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டதாகும்.

எலான் மஸ்க் காவி உடை அணிந்திருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ட்விட்டர் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தீவிர சனாதனவாதியாக காவி உடையுடன் இருப்பதாக ”தீவிர சனாதன சங்கி எலோன் மஸ்க். மானம் ஈனம் சூடு சொரணை இருந்தா வெளியே போங்கடா அயோக்கியா திராவிடியாக்களே” என்கிற வாசகங்களுடன் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot from Twitter @Johni_raja

Archived Link

Screenshot from Facebook/ranavivek.r
Screenshot from Facebook/suyambu.annachi

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் என்று பரவும் மியான்மர் வீடியோ!

Fact Check/Verification

எலான் மஸ்க் காவி உடை அணிந்திருப்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தில் hokagemodisama என்கிற சமூக வலைத்தளப்பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் அக்குறிப்பிட்ட வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.

அதன்முடிவில், குறிப்பிட்ட அச்சமூக வலைத்தள பயனர் ஒரு AI Artist மற்றும் இந்து சமயம் தொடர்பான மற்றும் பிரதமர் மோடி தொடர்பான வரைகலைஞர் என்று தனது Bioவில் பதிவிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது. குறிப்பிட்ட இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்புகைப்படத்தை அவர் Midjourney AI மூலமாக உருவாக்கப்பட்டது என்று “ Bhagwa sher Elon Musk!” என்கிற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.

Instagram will load in the frontend.

மேலும், optic இணையதளத்தில் இப்புகைப்படத்தை பதிவிட்டு ஆராய்ந்தபோது, அதன்முடிவிலும் இப்புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகியது.

Also Read: செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் வாங்க மறுத்தாரா சித்தராமையா?

Conclusion

எலான் மஸ்க் காவி உடை அணிந்திருப்பதாகப் பரவும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Instagram Post from Hokagemodisama
, Dated June 21, 2023
Optic Website Result

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular