சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று பரவும் பழைய படம்!

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று பரவும் பழைய படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை

Fact: வைரலாகும் படம் கடந்த 2017 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.

“கன்னியாகுமாரியில் பாஜக வேட்பாளர் பொன்னார் தேர்தல் பரப்புரை.. அலைகடலென திரண்ட மக்கள்… இப்போ புரியுதா நாங்க ஏன் NOTA BJP என்று சொல்கிறோம் என்று”என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று பரவும் புகைப்படம்

X Link | Archive Link

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று பரவும் புகைப்படம்

Archive Link

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று பரவும் புகைப்படம்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ‘Mr. Drugs நிதி’ என்று தனக்கு மக்கள் செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி கூறினாரா?

Fact Check/Verification

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று குறிப்பிட்டு வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் ”And there are the 1 crore ppl of TN who joined BJP.. verum kaathudhaanga irukku..deepest sympathies to them” என்று தலைப்பிட்டு வைரலாகும் இதே படத்தை செப்டம்பர் 11, 2017 அன்று பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் கமிஷனின் உறுப்பினருமான குஷ்பு சுந்தர் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று பரவும் புகைப்படம்

தொடர்ந்து தேடியதில் வினவு எனும் இணையத்தள ஊடகத்தில் திருச்சியில் பாஜக சார்பில் நடைப்பெற்ற நீட் ஆதரவுப் பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி இப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இச்செய்தியானது செப்டம்பர் 12, 2017 அன்று வெளியிடப்பட்டிருந்தது. இக்கூட்டமானது செப்டம்பர் 09, 2017 அன்று நடைப்பெற்றதாக அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று பரவும் புகைப்படம்

 Also Read: கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தனரா?

Conclusion

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும். திருச்சியில் பாஜக சார்பில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from Kushbhu Sundar, Dated September 11, 2017
Report from Vinavu, Dated September 12, 2017

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular