சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkகோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தனரா?

கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தனரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தனர்.

Fact: வைரலாகும் படம் கடந்த 2022 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.

“டம்மி அண்ணாமலைக்காக கோவையில் டம்மி வேட்பாளரை போடுவதற்காக பேக்கரி டீலிங் நடந்த போது” என்று குறிப்பிட்டு அண்ணாமலையும் உதயநிதி ஸ்டாலினும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தாக பரவும் புகைப்படம்

X Link | Archive Link

கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தாக பரவும் புகைப்படம்

Facebook Link

கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தாக பரவும் புகைப்படம்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ‘Mr. Drugs நிதி’ என்று தனக்கு மக்கள் செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி கூறினாரா?

Fact Check/Verification

கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் ”முதல்வர் எப்படி இருக்கிறார்? உதயநிதியிடம் கேட்ட அண்ணாமலை” என்று தலைப்பிட்டு ஜூலை 15, 2022 அன்று மின்னம்பலம் வெளியிட்டிருந்த செய்தியில் இதே படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேஷின் தாயார் மரணத்திற்கு சென்றிருந்தபோது இப்படம் எடுக்கப்பட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தாக பரவும் புகைப்படம்

தொடர்ந்து தேடியதில் வேறு சில ஊடகங்களும் இதே செய்தியை இதே புகைப்படத்துடன் அச்சமயத்தில் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

 Also Read: KT ராகவன் காலில் விழுந்த அண்ணாமலை என்று பரவும் எடிட் புகைப்படம்!

Conclusion

கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும். ஐசரி கணேஷின் தாயார் மரணத்திற்கு இவ்விருவரும் சென்றபோது இப்படம் எடுக்கப்பட்டது.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from Minnambalam, Dated July 15, 2022
Report from IBC Tamilnadu, Dated July 15, 2022
Report from Indian Express Tamil, Dated July 15, 2022
Report from Asianet News Tamil, Dated July 15, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular