சனிக்கிழமை, நவம்பர் 2, 2024
சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

HomeFact Checkஇந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ!

இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ

வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.

அவ்வீடியோவில் கடலுக்கடியில் எரிமலை ஒன்று வெடிப்பதாக காட்சி ஒன்று இருந்தது. அந்த வீடியோவின் கீழ், இந்தோனேஷியா கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி. மொபைல் போனில் பார்க்கும் காட்சி இருட்டியப்பின் 15 வினாடிகள் காத்திருக்கவும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Source: WhatsApp Bot

சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படத்தை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ - 02
Screenshot from Twitter @reporter_hameed
இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ - 03
Screenshot from Facebook / valarmathi.mathi.186

Also Read: காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து நீக்கப்பிட்டபின் பரவிய போலிச் செய்திகளின் தொகுப்பு!

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று கூறி  வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதன் பின்னணியில் இருந்த உண்மைய அறிய, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலானது Newshub அக்டோபர் 11, 2017 அன்று  ‘Watch Auckland get wiped out by undersea volcanic eruption’ என்று தலைப்பிட்டு வெளியிட்ட செய்தி ஒன்றுக்கு நம்மை அழைத்து சென்றது.  இச்செய்தியில்  Auckland Museum இந்த வீடியோவை உருவாக்கியதாக என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ - 04
Screengrab from Newshub website

தொடர்ந்து தேடுகையில் Mirror வெளியிட்ட செய்தி ஒன்றை நம்மால் காண முடிந்தது. இச்செய்தியில் பேராசியர் காலின் வில்ஸனின் ஆய்வின் ஒரு பகுதியாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ - 05
Screengrab from Mirror website

மேற்கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து தேடுகையில்  Auckland War Memorial Museum எனும் யூடியூப் பக்கத்தில் A Short History of Volcanoes in NZ – Auckland Museum எனும் தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அந்த வீடியோவின் டிஸ்கிரிஷனில், ‘எரிமலை வெடிப்பால் ஏற்படும் நிலநடுக்கத்தை விளக்கும் உருவகம் (This is an educational simulation of an earthquake caused by a volcanic eruption)’  என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், வைரலாகும் வீடியோ இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் வெடித்த எரிமலை வீடியோ கிடையாது, அது செயற்கையாக உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வீடியோ.

Also Read: உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை வழங்குன்றதா FIFA?

Conclusion

இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று கூறி  சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது

Result: False

Sources

Report By Newshub, Dated October 11, 2017
YouTube Video By Auckland War Memorial Museum, Dated December 19, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular