லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வழித்தடம் ஒன்றிற்கு ராசு வன்னியர் அவென்யூ என்று கலிஃபோர்னியா அரசு பெயரிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.

ராசு வன்னியர் கலிஃபோனியாவில் மென்பொருள் பொறியாளர் மற்றும் தொழிலதிபராக உள்ளார் என்றும், 2008ல் உலக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது தன் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் இதர கலிபோர்னியா நிறுவனங்களின் தயாரிப்புகளை தொடர்ந்து இந்திய நிறுவனங்களுக்கு விற்று கலிஃபோர்னியா மாகாணத்தின் பொருளாதாரத்தை வலுப்பெற செய்தார் என்றும், இதன் காரணமாக கலிஃபோர்னியா அரசு வழித்தடம் ஒன்றிற்கு ராசு வன்னியர் அவென்யூ என்று பெயர் சூட்டி இவரை கௌரவப்படுத்தியுள்ளது என்றும் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வழித்தடம் ஒன்றிற்கு ராசு வன்னியர் அவென்யூ என்று கலிஃபோர்னியா அரசு பெயரிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முன்னதாக ராசு வன்னியர் எனும் நபர் உண்மையில் இருக்கின்றாரா அல்லது இருந்தாரா என்பதை அறிய இந்நபர் குறித்து கூகுளில் தேடினோம். இத்தேடலில் இவ்வாறு ஒரு நபர் இருந்ததற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை. கலிஃபோர்னியா மாகாணம் கௌரவிக்கும் நிலையில் இருந்த ஒரு நபர் குறித்து ஒரு செய்தியோ, அல்லது குறிப்போ இல்லாதது நமக்கு மிகப்பெரிய ஆச்சரித்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ராசு வன்னியர் வழித்தடம் குறித்த உண்மையை அறிய வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில் இப்புகைப்படமானது எடிட் செய்யப்பட்ட போலியானது என்பதை அறிய முடிந்தது.
Wings Cartage Inc எனும் கார்கோ நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த புகைப்படமே எடிட் செய்யப்பட்டு இவ்வாறு பரப்பப்பட்டு வருகின்றது.
Sacramento எனும் பெயரே ராசு வன்னியர் அவென்யூ மாற்றப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Also Read: கிணறு தோண்டும்போது பீறிட்ட வெள்ளம்; வைரலாகும் வீடியோ அமராவதி மாவட்டத்தில் எடுக்கப்பட்டதா?
Conclusion
லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வழித்தடம் ஒன்றிற்கு ராசு வன்னியர் அவென்யூ என்று கலிஃபோர்னியா அரசு பெயரிட்டதாக கூறி பரவும் புகைப்படம் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered
Source
Wings of Cartege
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)