சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkலிப்டில் பயணிக்கும் பெண்களிடம் நகை பறிப்பு செய்யப்படுவதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

லிப்டில் பயணிக்கும் பெண்களிடம் நகை பறிப்பு செய்யப்படுவதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தனியாக எங்கு சென்றாலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முக்கியமாக பெண்கள் தனியாக செல்லும் போது மிகவும் கவனமாக இருங்கள்

Fact: வைரலாகும் வீடியோ விழிப்புணர்விற்காக சித்தரிக்கப்பட்ட ஒன்றாகும்.

லிப்டில் பயணிக்கும் பெண்களிடம் அவர்களை மயக்கமாக்கி நகைகளை பறிக்கும் கும்பல் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”தனியாக எங்கு சென்றாலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முக்கியமாக பெண்கள் தனியாக செல்லும் போது மிகவும் கவனமாக இருங்கள்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

லிப்டில் பயணிக்கும்
Screenshot from X @LifeOnChakra

Archived Link

Screenshot from Facebook/sibichander

Facebook Link

Screenshot from X @Vinoth2214

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டாரா?

Fact Check/Verification

லிப்டில் பயணிக்கும் பெண்களிடம் அவர்களை மயக்கமாக்கி நகைகள் பறிக்கப்படுவதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

 வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ Eye Spot என்கிற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருப்பதை நம்மால் அறிய முடிந்தது.

கடந்த ஆகஸ்ட் 14, 2022 அன்று “THIS WAS UNEXPECTED… BE CAREFUL.. Social Awareness Video By EYE SPOT” என்று இந்த வீடியோ பதிவாகியுள்ளது.

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்களை இந்த Eye Spot பக்கம் பதிவிட்டு வருகிறது. குறிப்பிட்ட பக்கத்தின் விழிப்புணர்வு வீடியோவையே உண்மையான நிகழ்வாக பலரும் பரப்பி வருகின்றனர் என்பது நமக்குத் தெளிவாகியது.

Also Read: பிரதமர் மோடியை விமர்சித்ததால் சுட்டுக்கொல்லப்பட்ட மணிப்பூர் சிறுமி என்று பரவும் மியான்மர் வீடியோ!

Conclusion

லிப்டில் பயணிக்கும் பெண்களிடம் அவர்களை மயக்கமாக்கி நகைகள் பறிக்கப்படுவதாகப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டது  என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, Eye Spot, Dated August 14, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular