செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact Checkசீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்தாரா?

சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்தார்.

Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்ததாக பரப்பப்படும் வீடியோ

X Link | Archive Link

சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்ததாக பரப்பப்படும் வீடியோ

X Link

சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்ததாக பரப்பப்படும் வீடியோ

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதா?

Fact Check/Verification

சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்ததாக பரப்பப்படும் வீடியோவில் ‘M நாடு’ என்ற யூடியூப் சேனலின் லோகோ இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதைத் தொடர்ந்து அந்த யூடியூப் சேனலில் தேடுகையில் ‘எனக்காக தான் இ.பி.எஸ் பேசுறாரு?’ என்று தலைப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் அவ்வீடியோவில் சீமான் வைரலாகும் வீடியோவில் இருப்பதுபோல் தெளிவற்று பேசவில்லை. மாறாக இயல்பாய் தெளிவாக பேசி இருந்தார்.

தொடர்ந்து தேடுகையில் நாதகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பொன்மலையில் சீமான் பரப்புரை செய்ததாக கூறி வீடியோ ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் பகுதி 28:13 நேரத்தில் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. அதிலும் சீமான் இயல்பாகவே பேசி இருந்தார்.

இவற்றின்படி பார்க்கையில் சீமான் இயல்பாக பேசும் வீடியோவை எடிட் செய்து, அதன் வேகத்தை குறைத்து, சீமான் தெளிவற்று பேசுவதாக மாற்றி, அவர் குடிபோதையில் பரப்புரை செய்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது என அறிய முடிகின்றது.

 Also Read: கருணாநிதியை திருடன் என்றாரா சுப.வீரபாண்டியன்?

Conclusion

சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்ததாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக இந்த உண்மை நமக்கு தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Our Sources
Youtube Video from M Nadu News, Dated April 03, 2024
Youtube Video from Naam Tamilar Katchi, Dated April 02, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular