புதன்கிழமை, மே 1, 2024
புதன்கிழமை, மே 1, 2024

HomeFact Checkகட்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மட்டும் சாடிய வைகோ என்று பரவும் எடிட் வீடியோ!

கட்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மட்டும் சாடிய வைகோ என்று பரவும் எடிட் வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கட்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மட்டும் சாடிய வைகோ

Fact: இத்தகவல் தவறானது. வைரல் வீடியோ வைகோவின் முழுமையான பேட்டி அல்ல.

கட்சத்தீவு விவகாரத்தில் தான் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை மட்டும் சாடிய வைகோ என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. ANI உள்ளிட்ட ஊடகங்களும் இந்த வீடியோவை செய்தியாக வெளியிட்டுள்ளன.

கட்சத்தீவு
Screenshot from X @ashok777_kalam

X Link/Archived Link

Screenshot from X @CTR_Nirmalkumar

X Link/Archived Link

Screenshot from X @smkumarlakshmi

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டாரா?

Fact Check/Verification

கட்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மட்டும் சாடிய வைகோ என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா அவர் மோடி பற்றி பேசிய பகுதியையும், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் காங்கிரஸ் பற்றிய பகுதியையும் ஷேர் செய்த நிலையில் வைகோ பேசியிருந்த முழுமையான வீடியோவைத் தேடினோம். அப்போது, இதுகுறித்து சன் நியூஸ் வெளியிட்டிருந்த முழுமையான வீடியோ நமக்குக் கிடைத்தது.

அதில், “காங்கிரஸ் தமிழ்நாட்டை வஞ்சித்தது. ஆனால், பிறகு பத்து வருடங்களும் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை சோதனை செய்வதற்கான காலகட்டமாக அமைந்தது. அவர் ஒரு நம்பிக்கை துரோகி. அவர் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளார்; அவர் இந்தியாவை வஞ்சித்துள்ளார்; அவர் இலங்கையை வஞ்சித்துள்ளார். அதுதான் நரேந்திர மோடி” என்று பேசியிருந்தார்.

குறிப்பிட்ட வீடியோவில் இருந்து கட் செய்யப்பட்ட காங்கிரஸை வைகோ சாடும் பகுதி மட்டும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது; ANI உள்ளிட்ட ஊடகங்களும் இந்த வீடியோவை செய்தியாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Also Read: அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம் என்றாரா அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்?

Conclusion

கட்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மட்டும் சாடிய வைகோ என்று பரவும் வீடியோ முழுமையானது அல்ல என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக நமக்கு தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
X post from Sun News Tamil, Dated April 03, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular