செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact Checkவரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதா?

வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதாக பரவும் வீடியோ.

Fact: இத்தகவல் தவறானதாகும். அக்கோவில் 2 ஆண்டுகளுக்கு முன், 2022 ஆம் ஆண்டிலேயே இடிக்கப்பட்டுவிட்டது.

“தேர்தல் நேரத்தில் கூட திராவிடத்தின் இந்து விரோத ஆணவம் – வன்மம் அடங்கவில்லை. இவர்களை புறக்கணித்து பாஜகவிற்கு வாக்களித்து இவர்களுக்கு பாடம் புகட்டுவோம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அவ்வீடியோவில் முடிச்சூர் வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதாக பரவும் தகவல்

X Link | Archive Link

வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதாக பரவும் தகவல்

Archive Link

வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதாக பரவும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டாரா?

Fact Check/Verification

வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதாக பரவும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்ததில் வைரலாகும் இதே வீடியோ ஜனவரி 10, 2022 அன்று ‘Rajesh Hindu Munnani’ என்ற பயனர் ஐடியை கொண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பதை கண்டறிய முடிந்தது.

வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதாக பரவும் தகவல்

தொடர்ந்து இவ்வீடியோ குறித்து தேடுகையில், ஜனவரி 10, 2022 அன்று ஈடிவி பாரத் தமிழ்நாடு ‘வரதராஜபுரம் நரசிம்மா ஆஞ்சநேயர் கோயில் இடிப்பு’ என்று தலைப்பிட்டு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் நீர்நிலையில் இக்கோவிலானது கட்டப்பட்டிருந்ததால் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இக்கோவில் இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதாக பரவும் தகவல்

இதனை தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களிலும் அச்சமயத்தில் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்   

 Also Read: அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம் என்றாரா அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்?

Conclusion

வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அக்கோவிலானது 2 ஆண்டுகளுக்கு முன், 2022 ஆம் ஆண்டிலேயே இடிக்கப்பட்டுவிட்டது. கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக இந்த உண்மை நமக்கு தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Facebook post from the user, Rajesh Hindu Munnani, Dated January 10, 2022
Report from ETV Bharath Tamilnadu, Dated January 10, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular