Fact Check
அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தாரா?
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அமைச்சர் சேகர்பாபுவின் மகள் காதல் திருமணம் செய்துக் கொண்டு பெங்களூர் போலீஸ் கமிஷனரிடம் பாதுகாப்பு வேண்டியதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வந்தது.
இந்நிலையில், சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்ட தனது மகளையும் அவரது கணவரையும் அமைச்சரே அடியாள் வைத்து மிரட்டுவதா? சாதி மறுப்பு இணையேற்ற ஜோடிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும், ஜனநாயக அமைப்புகளும் துணையாக நிற்கும் என்று விசிக தலைவர் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: விசிக தலைவர் திருமாவளவனிடம் சால்வையை வாங்கி கீழே வைத்தாரா முதல்வர் ஸ்டாலின்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் தந்தி தொலைக்காட்சி வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர்கள், ”இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தனர்.
இதனைத் தொடர்ந்து விசிக இணைச் செயலாளர் வன்னி அரசைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். இதற்கு அவர், “இது அவதூறான செய்தி, திட்டமிட்ட பொய் பரப்புரை” என்று பதிலளித்தார்.
Also Read: மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றாரா செந்தில் பாலாஜி?
Conclusion
அமைச்சர் சேகர்பாபுவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமது விரிவான ஆய்வுக்குப்பின் தெளிவாகின்றது.
இந்த உண்மையை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Sources
Newschecker Conversations
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)