திங்கட்கிழமை, ஜூன் 24, 2024
திங்கட்கிழமை, ஜூன் 24, 2024

HomeFact Checkநோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் காலமானதாகப் பரவிய வதந்தி!

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் காலமானதாகப் பரவிய வதந்தி!

Authors

Pankaj Menon is a fact-checker based out of Delhi who enjoys ‘digital sleuthing’ and calling out misinformation. He has completed his MA in International Relations from Madras University and has worked with organisations like NDTV, Times Now and Deccan Chronicle online in the past.

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Ruby leads editorial, operations and initiatives at Newschecker. In her former avatar at New Delhi Television (NDTV), India’s leading national news network, she was a news anchor, supervising producer and senior output editor. Her over a decade-long career encompasses ground-breaking reportage from conflict zones and reporting on terror incidents, election campaigns, and gender issues. Ruby is an Emmy-nominated producer and has handled both local and international assignments, including the coverage of Arab Spring in 2011, the US Presidential elections in 2016, and ground reportage on the Kashmir issue since 2009.

Claim: நோபல் பரிசு பெற்ற பொருளாதாரா நிபுணர் அமர்த்தியா சென் காலமானார்.

Fact: வைரலாகும் செய்தி ஒரு வதந்தியாகும்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் காலமானதாக செய்தி ஒன்று பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவியது.

Screenshot from X @NewsTamilTV24x7

Archived Link

நோபல் பரிசு
screenshot from Facebook/Umaidurai Kailai

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காஸா மீது பழிக்கு பழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் என்று பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் காலமானதாகப் பரவிய செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

நம்முடைய தேடலில் பத்திரிக்கையாளர் Seema Chisti, பரவிய தகவல் தவறானது என்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

எனவே, இந்த செய்தி குறித்து அமர்த்தியா சென் மற்றும் அவரது மகள் அந்தாரா சென் ஆகியோர் இணைந்து இருக்கும் Pratichi trust தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டோம். அதன் நிர்வாக அதிகாரி செளமிக் முகர்ஜி, “அமர்த்தியா சென் அவர்களது மூத்த மகளிடம் நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் நலமுடன் இருப்பதாக உறுதி செய்துள்ளார் அவரது மகள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, அமர்த்தியா சென்னின் மூத்த மகளான அந்தாரா சென்னிடம் நியூஸ்செக்கர் சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம். அவர், ”Prof சென் நலமுடன் இருக்கிறார். அவருடன் நானும் இங்கே கேம்பிரிட்ஜில் இருக்கிறேன். போலி செய்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தார்.

மேலும், அவரது மற்றொரு மகள் நந்தனா சென்னும் பரவிய செய்தி ஒரு வதந்தி என்று தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார்.

Also Read: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தாரா?

Conclusion

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் காலமானதாக பரவிய செய்தி தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X Post from, Seema Chishti, Dated October 10, 2023
X Post from Nandana Sen, Dated October 10, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Pankaj Menon is a fact-checker based out of Delhi who enjoys ‘digital sleuthing’ and calling out misinformation. He has completed his MA in International Relations from Madras University and has worked with organisations like NDTV, Times Now and Deccan Chronicle online in the past.

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Ruby leads editorial, operations and initiatives at Newschecker. In her former avatar at New Delhi Television (NDTV), India’s leading national news network, she was a news anchor, supervising producer and senior output editor. Her over a decade-long career encompasses ground-breaking reportage from conflict zones and reporting on terror incidents, election campaigns, and gender issues. Ruby is an Emmy-nominated producer and has handled both local and international assignments, including the coverage of Arab Spring in 2011, the US Presidential elections in 2016, and ground reportage on the Kashmir issue since 2009.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular