ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஸ்டாலின் vs ஈபிஎஸ்; வைரலாகும் எடிட் படம்!

ஸ்டாலின் vs ஈபிஎஸ்; வைரலாகும் எடிட் படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஸ்டாலின் vs ஈபிஎஸ் என்று வைரலாகும் படம்.

Fact: ஈபிஎஸ் பிரதமர் மோடியுடன் இருக்கும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பிரதமரை சந்தித்தபோது எடுத்த படத்தை வைத்து அப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது பிரதமர் மோடி கைகட்டியவாறு இருக்கும் படம் ஊடகங்களில் வெளிவந்ததை தொடர்ந்து, அப்படத்தையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமருடன் இருக்கும் படத்தையும் இணைத்து எடப்பாடி பழனிசாமியை சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.

ஈபிஎஸ் பிரதமருடன் இருக்கும் படத்தில் பிரதமர் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தபடி இருக்க ஈபிஎஸ் அவர் அருகில் அமர்ந்திருப்பதாக இருந்தது.

ஸ்டாலின் vs ஈபிஎஸ் என்று வைரலாகும் படம்

X Link | Archive Link

ஸ்டாலின் vs ஈபிஎஸ் என்று வைரலாகும் படம்

Archive Link

ஸ்டாலின் vs ஈபிஎஸ் என்று வைரலாகும் படம்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பழனி பஞ்சாமிர்தத்திற்கும் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் நிறுவனம் நெய் வழங்குவதாகப் பரவும் பொய்!

Fact Check/Verification

ஸ்டாலின் vs ஈபிஎஸ் என்று வைரலாகும் படத்தில் ஈபிஎஸ் படத்தை கூர்ந்து பார்க்கையில் அவரது தலையும் உடலும் பொருத்தமற்று இருப்பதை உணர முடிந்தது. அவரது படத்தில் கழுத்துப்பகுதியே காணப்படவில்லை. இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆராய்ந்தோம்.

அதில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என தெரிய வந்தது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசியபோது எடுக்கப்பட்ட படத்தை வைத்து அப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

புரோகேரளா எனும் ஊடகத்தில் ஏப்ரல் 25, 2015 அன்று ஓபிஎஸ் பிரதமரை சந்தித்து பேசியதாக வெளியிடப்பட்ட செய்தியில் உண்மையான படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

ஸ்டாலின் vs ஈபிஎஸ் என்று வைரலாகும் படம்
புரோகேரளாவில் வெளிவந்த செய்தி

தொடர்ந்து தேடுகையில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும் ஓபிஎஸ் பிரதமர் மோடியுடன் இருக்கும் படம் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது.

ஸ்டாலின் vs ஈபிஎஸ் என்று வைரலாகும் படம்

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் படத்தில் ஈபிஎஸ் இருக்கும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.

ஸ்டாலின் vs ஈபிஎஸ் என்று வைரலாகும் படம்

 Also Read: திருப்பதி ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி சுத்தம் செய்தாரா பவன் கல்யாண்?

Conclusion

ஸ்டாலின் vs ஈபிஎஸ் என்று வைரலாகும் படத்தில் ஈபிஎஸ் பிரதமர் மோடியுடன் இருக்கும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பிரதமரை சந்தித்தபோது எடுத்த படத்தை வைத்து அப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Sources
News Report by Pro Kerala, Dated April 25, 2015

PM India Gallery


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular