வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024
வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

HomeFact Checkலண்டனில் பிபிசி வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை மக்கள் எதிர்த்த நிகழ்வா இது?

லண்டனில் பிபிசி வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை மக்கள் எதிர்த்த நிகழ்வா இது?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

லண்டனில் பிபிசி வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பொதுமக்களே நிராகரிக்கும் நிகழ்வு என்பதாக வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screenshot from Facebook/c.murugavel.1
Screenshot from Twitter @PSuyambuNadar

“லண்டனில் பொதுமக்களே தெருவுக்கு வந்து பிபிசி’யை காறி உமிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பாரத பிரதமர் மோடியை பற்றி மிக காழ்ப்புணர்ச்சியுடன் பகிரப்பட்ட நிகழ்ச்சியை UK மக்கள் காரி துப்பிய நிகழ்வு” என்கிற அடைமொழியுடன் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்றாரா தமிழ்கேள்வி செந்தில்வேல்?

Fact Check/Verification

லண்டனில் பிபிசி வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை மக்கள் எதிர்த்த நிகழ்வு என்று பரவுகின்ற வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

பரவும் வீடியோவில், “Truth To Be Told” என்று குறிப்பிட்டிருந்த நிலையில், கீ-வேர்டுகள் மூலமாக கூகுளில் தேடினோம். அதன்முடிவில், InfoWars என்கிற செய்தி இணையதளம் வெளியிட்டிருந்த ”Epic Anti-Covid Vaxx Protest! Massive Crowd Descends On BBC Headquarters In London” என்கிற செய்திக்கட்டுரை நமக்குக் கிடைத்தது.

தொடர்ந்து, இந்த கட்டுரையில் வைரலாகும் வீடியோவும் இடம்பெற்றிருந்தது. அக்கட்டுரையில், “எம்பி ஆண்ட்ரோ பிரிட்ஜ்டன், பத்திரிக்கையாளர் மார்க் ஷர்மன் மற்றும் கோவிட் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களின் உரையை கேட்க பிபிசி தலைமையிடத்திற்கு வெளியில் குவிந்த பிரிட் மக்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “பிபிசி தலைமையகத்திற்கு வெளியே மக்கள் கூட்டம் “Shame on you” என்று கோஷமிட்ட வீடியோ” என்கிற தலைப்பில் வைரலாகும் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

Oracle Films வெளியிட்ட வீடியோ என்கிற தலைப்புடன் இந்த காட்சி இடம்பெற்றிருந்த நிலையில் OracleFilmsUK வின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தேடினோம்.

அதன் முடிவில், “SHAME ON YOU” – British public to the BBC. Truth be Told London, a demonstration outside BBC Broadcasting House, Portland Place, London on 21st Jan 2023.” என்கிற தலைப்பில் இந்த வீடியோ அப்பக்கத்தில் இடம் பெற்றிருந்தது.

மேலும், இந்நிகழ்வானது கோவிட் தடுப்பூசி சோதனை உயிரிழப்புகளுக்கு நீதி கேட்கும் வகையில் நடைபெற்றது என்றும், கோவிட் தடுப்பூசி பாதிப்புகள் குறித்து இந்த “Truth To Be Told” என்கிற இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது என்றும் இந்த வீடியோ மற்றும் புகைப்படத் தொகுப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வைரலாகும் வீடியோ கோவிட் தடுப்பூசி தொடர்பான மரணங்களுக்காக அந்நாடு அரசு மற்றும் பிபிசிக்கு எதிரான பிரிட்டிஷ் மக்களின் போராட்டம் தொடர்பானது; பிபிசி வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்திற்கானது அல்ல என்பது தெரிகிறது. இது தொடர்பான தரவுகளை இங்கே மற்றும் இங்கே காணுங்கள்.

Also Read: தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா?

Conclusion

லண்டனில் பிபிசி வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை மக்கள் எதிர்த்த நிகழ்வு என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாகத் தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources
Report From, InfoWars, Dated January 24, 2023
Report From, Eraoflight, Dated January 25, 2023
Report From, BitChute, Dated January 25, 2023
Twitter Post From, Truth To Be Told, Dated January 23, 2023
Twitter Post From, Oracle Films, Dated January 23, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோஅல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular