திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkநடிகர் சன்னி தியோல் குடித்துவிட்டு சாலையில் நடந்ததாக பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் சன்னி தியோல் குடித்துவிட்டு சாலையில் நடந்ததாக பரவும் வீடியோ உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: குடித்துவிட்டு சாலையில் தள்ளாடிய நடிகர் சன்னி தியோல்

Fact: பரவும் வீடியோ அவரது புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் காட்சியாகும்.

நடிகர் சன்னி தியோல் குடித்துவிட்டு சாலையில் நடந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

”தெரிந்து கொள்ளுங்கள் இவர்தான் பாஜக எம். பி. நடிகர் சன்னி டியோல், நடிகர் தர்மேந்திராவின் மகன். முஸ்லிமாக மாறி தர்மேந்திராவை முஸ்லிமாக மாற்றி கல்யாணம் செய்து கொண்டவர்தான் சன்னி டியோளின் அம்மாவுக்கு சக்களத்தியான மதுரா எம்.பி. மாமி ஹேமா மாலினி.” என்று இந்த வீடியோ பரவுகிறது.

நடிகர் சன்னி தியோல்
Screenshot from X @niayayakkural

Archived Link

Screenshot from Facebook/stalin.834122

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

நடிகர் சன்னி தியோல் குடித்துவிட்டு சாலையில் நடந்ததாக பரவும் வீடியோ  குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது சன்னி தியோலின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த வீடியோவின் மற்றொரு வடிவம் பதிவாகியிருந்தது.

அவரது பதிவின்படி, Safar என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி இது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட காட்சியை கேமரா மூலமாக படம்பிடிப்பதும் தெளிவாக பதிவாகியுள்ளது.

Also Read: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் பழைய வீடியோ!

Conclusion

நடிகர் சன்னி தியோல் குடித்துவிட்டு சாலையில் நடந்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
X Post from Sunny Deol, Dated December 06, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular