Fact Check
பஹல்காம் தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் வீடுகள் தகர்க்கப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Claim
பஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ள தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் வீடுகள் தகர்க்கப்பட்டதாக பரவும் வீடியோ.
Fact
வைரலாகும் வீடியோ 2021 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். இவ்வீடியோவுக்கும் பஹல்காம் தாகுதலுக்கும் தொடர்பில்லை.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ள தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் வீடுகள் தகர்க்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு நன்கொடை வழங்க வங்கிக் கணக்கை தொடங்கியதா மத்திய அரசு?
Fact Check/Verification
பஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ள தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் வீடுகள் தகர்க்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் ஏசியன் மெயில் எனும் யூடியூப் பக்கத்தில் மே 12, 2021 அன்று வைரலாகும் இதே வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. ஜம்மு காஷ்மீரின் ஆனந்தநாக் மாவட்டத்திற்குட்பட்ட கோக்கர்நாக் பகுதியில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் Excelsior News எனும் ஊடகத்தின் யூடியூப் பக்கத்திலும் இதே தினத்தில் இதே தகவலுடன் இதே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் காஷ்மீர் போலீஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த என்கவுண்டர் குறித்து மே 11, 2021 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இச்சம்பவம் குறித்து தி இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்களும் அச்சமயத்தில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ 4 ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோ என்பதும், இவ்வீடியோவுக்கும் தற்போதைய பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்பதும் உறுதியாகின்றது.
இதனையடுத்து பஹல்காம் தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தந்தவர்கள் வீடுகள் தகர்க்கப்பட்டதா என தேடினோம். இத்தேடலில் தீவிரவாதிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்களுக்கு தொடர்புடைய 8 வீடுகள் தகர்க்கப்பட்டதாக டைஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இதே செய்தியை தி இந்து ஊடகமும் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் வீடுகள் தகர்க்கப்பட்டதாக பரவும் தகவல் உண்மையே; ஆனால் வைரலாகும் வீடியோவுக்கும் அச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை என அறிய முடிகின்றது.
Also Read: பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 15 பேர் இஸ்லாமியர்கள் என்று பரவும் அட்டவணை உண்மையா?
Conclusion
பஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ள தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் வீடுகள் தகர்க்கப்பட்டதாக பரவும் வீடியோ 4 ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோவாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from Asian Mail, Dated May 12, 2021
Report from Excelsior News, Dated May 12, 2021
X post from Kashmir Zone Police, Dated May 11, 2021