புதன்கிழமை, ஜூலை 24, 2024
புதன்கிழமை, ஜூலை 24, 2024

HomeFact CheckFact Check: முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசினாரா தமிழன் பிரசன்னா?

Fact Check: முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசினாரா தமிழன் பிரசன்னா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழக முதல்வர் ஸ்டாலினை திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா தரக்குறைவாக பேசினார்

Fact: வைரலாகும் வீடியோ பழைய வீடியோவாகும். தமிழன் பிரசன்னா அவமரியாதையாக பேசியது எடப்பாடி பழனிசாமியையாகும்

தமிழக முதல்வர் ஸ்டாலினை திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா தரக்குறைவாக பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வைரலாகும் அந்த வீடியோவில் தமிழன பிரசன்னா, “முதலமைச்சர்னா யாரு  பெரிய கொம்பா? போலீஸ் துப்பாக்கியெல்லாம் வைத்திருந்தா பெரிய கொம்பா? எனக்கு வேலை செய்றதுக்கு நான் நியமித்துள்ள முதல் வேலையாள் நீ….” என்று பேசுவதாக உள்ளது.

சமூகவலைத்தளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலினை தமிழன் பிரசன்னா தரக்குறைவாக பேசியதாக வைரலாகும் தகவல்
Screengrab from Twitter@MuKeshM_
தமிழக முதல்வர் ஸ்டாலினை தமிழன் பிரசன்னா தரக்குறைவாக பேசியதாக வைரலாகும் தகவல்
Screengrab from Twitter@SaiAiadmk
தமிழக முதல்வர் ஸ்டாலினை தமிழன் பிரசன்னா தரக்குறைவாக பேசியதாக வைரலாகும் தகவல்
Screengrab from Twitter@Iampksanthosh

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளை கல்விக்கு நிதி உதவி தருவதாக பரவும் வதந்தி!

Factcheck / Verification

தமிழக முதல்வர் ஸ்டாலினை திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா தரக்குறைவாக பேசியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இதில் வைரலாகும் வீடியோ ஜூன் 27, 2018 அன்று எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது. SICP எனும் யூடியூப் பக்கத்தில் 28/06/2018 அன்று வைரலாகும் வீடியோவில் முழுப்பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் 2018 ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கி தமிழன் பிரசன்னா பேசியுள்ளதை காண முடிகின்றது.

இதே வீடியோ Dmk tamilan prasanna speech on modi & eps என்று தலைப்பிட்டு ரெட் பிக்ஸ் யூடியூப் பக்கத்தில் ஜூன் 28, 2018 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையின் பார்க்கையில் 2018 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி குறித்து  தமிழன் பிரசன்னா பேசிய வீடியோவை தற்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலினை பேசியதாக சமூக வலைத்தளங்களில் திரித்து பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகின்றது.

Also Read: Fact Check: அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்றாரா வானதி சீனிவாசன்?

Conclusion

தமிழக முதல்வர் ஸ்டாலினை திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா தரக்குறைவாக பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Youtube Post fom SICP, Dated June 27, 2018
Youtube Post fom Red Pix, Dated June 28, 2018

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular