Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கொரானாக் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக கர்நாடகாவின் குடகு மக்கள் அம்மாவட்டத்தின் ஆட்சியராக விளங்கும் அனீஸ் கண்மணி ஜாய் அவர்களின் காலில் விழுந்து வணங்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
அதில்,
“திருவனந்தபுரத்தில் செவிலியராக இருந்து, பின்பு ஐஏஎஸ் முடித்து, குடகு பகுதிக்கு மாவட்டக் கலெக்டராக வந்தவர் கண்மணி.
இவர் தன் செவிலியர் அனுபவத்தை வைத்துக் கொண்டு கொரானாக் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு குடகு மாவட்டத்தை முற்றிலும் கொரானா இல்லாப் பகுதியாக மாற்றியுள்ளார். இதற்காக குடகு மக்கள் அவருக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.”
எனக் கூறி இவ்வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இவ்வீடியோவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இத்தகவலை ஆய்வு செய்தோம்.
சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இவ்வீடியோவில் குறிப்பிட்டதுபோல், திருவனந்தபுரத்தைச் சார்ந்தவர் ஐஏஎஸ் ஆனாரா என்பதை உறுதி செய்ய இதுக்குறித்து முதலில் தேடினோம்.
அவ்வாறு தேடியதில், 2012 ஆம் ஆண்டு அனீஸ் கண்மணி ஜாய் என்பவர் செவிலியராக இருந்து, பின்பு ஐஏஎஸ்க்கு தேர்வாகிய செய்தி ஒன்று NDTVயில் வந்திருந்ததைக் காண முடிந்தது.
அச்செய்தி உங்களுக்காக
இவர் தற்போது குடகு மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.
ஆனால் இவரும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோவில் இருக்கும் பெண்மணியும் வெவ்வேறானவர்கள் ஆகும்.
நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் நாம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவில் இருக்கும் பெண்மணி அனீஸ் கண்மணி ஜாய் இல்லை என்பது நமக்குத் தெளிவாக உறுதியாகியது.
இதன்பின், வைரலான வீடியோவில் இருந்த பெண் யார் என்பதுக் குறித்துத் தேடினோம்.
அவ்வாறு தேடியதில், அப்பெண்ணின் பெயர் நஜியா என்பதும், இவர் ஐதராபாத்தைச் சார்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இவர் Safe Shop எனும் ரீசெல்லிங் கம்பெனியில் ரீசெல்லராக உள்ளார்.
நம் தேடலில் இவர் குறித்துப் பல வீடியோக்கள் இருப்பதைக் காண முடிந்தது.
இதில் வைர நிலை மெம்பராக ஆனதற்கு அக்கம்பெனியைச் சார்ந்தவர்கள் அவருக்கு மரியாதை செலுத்திய வீடியோ ஒன்றையும் காண முடிந்தது.
அவ்வீடியோ வாசகர்களின் பார்வைக்காக
இவ்வீடியோவைப் பயன்படுத்தியே அனீஸ் கண்மணி ஜாய் அவர்கள் குடகு மாவட்டத்தை முற்றிலும் கொரானா இல்லாப் பகுதியாக மாற்றியதாகவும் இதற்காக குடகு மக்கள் அவர் காலில் விழுந்து நன்றித் தெரிவித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பொய் செய்தி பரப்பி வருகின்றனர்.
நியூஸ்செக்கர் தமிழின் விரிவான ஆய்வின் மூலம், வைரலான வீடியோவில் இருந்தவர் அனீஸ் கண்மணி ஜாய் அவர்கள் அல்ல என்பதும் அவர் ஐதராபாத்தைச் சேர்ந்த நஜியா என்பதும் தெளிவாகியுள்ளது.
Twitter Profile: https://twitter.com/ddtimes/status/1320750600498286592
Twitter Profile: https://twitter.com/Ravikandaswami8/status/1320937839819804672
Facebook Profile: https://www.facebook.com/ravikravik62/videos/155640509575810
Twitter Profile: https://twitter.com/tweetanum/status/1320945194020188161
NDTV: https://www.youtube.com/watch?v=b4l-x4JBiEo
Kodagu.nic.in: https://kodagu.nic.in/en/dm-profile/smt-annies-kanmani-joy-ias/
Youtube: https://www.youtube.com/watch?v=gacEFBMwlLM
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)