செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact Checkஉலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் மைதானத்தில் ஊர்வலம் போனாரா பிரதமர் மோடி?

உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் மைதானத்தில் ஊர்வலம் போனாரா பிரதமர் மோடி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் மைதானத்தில் ஊர்வலம் போனார் பிரதமர் மோடி

Fact: இத்தகவல் தவறானதாகும். உண்மையில் இவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் எட்டு மாதங்களுக்கு முன்பு மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் இந்தியா வந்தபோது நடைப்பெற்றதாகும்.

2023 கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நேற்றைய முன்தினம் அகமதாத் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, 6 ஆவது முறையாக கோப்பையை தட்டி சென்றது.

இந்நிலையில், 10 மேட்ச் நல்லா விளையாடினவங்க, இந்த அளவுக்கு சொதப்பனதுக்கு, என்ன காரணம்ன்னு, இப்ப தான்டா புரியுது… ஆட்டத்துக்கு முன்னாடியே நம்ம ஜீ நடத்திய இறுதி ஊர்வலம் தான் டா…” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் பிரதமர் மோடிமைதானத்தில் ஊர்வலம் போனதாக வைரலாகும் வீடியோத்தகவல்

Twitter Link | Archived Link

உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் பிரதமர் மோடிமைதானத்தில் ஊர்வலம் போனதாக வைரலாகும் வீடியோத்தகவல்

Facebook Link

உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் பிரதமர் மோடிமைதானத்தில் ஊர்வலம் போனதாக வைரலாகும் வீடியோத்தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாற்றுத்திறனாளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள வீல்சேரை இலவசமாக தருகின்றதா மத்திய அரசு?

Fact Check/Verification

உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் பிரதமர் மோடிமைதானத்தில் ஊர்வலம் போனதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இத்தகவல் குறித்து தேடினோம். இத்தேடலில் பிரதமர் மோடி இறுதிப்போட்டியின் இரண்டாம் பாகத்தின்போதே மைதானத்திற்கு வந்தார் என அறிய முடிந்தது.  

இதனடிப்படையில் பார்க்கையில் போட்டி இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன் பிரதமர் மைதானத்தில் ஊர்வலம் போனதாக கூறப்படும் தகவல் தவறானது என்பது நிரூபணமானது. இதனையடுத்து வைரலாகும் இவ்வீடியோ எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என ஆராய்ந்தோம்.

அதில் வைரலாகும் இவ்வீடியோ இவ்வருடம் மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்டது என அறிய முடிந்தது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்தார். அச்சமயத்தில் அவரும் பிரதமர் மோடியும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தை அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் கண்டுக்களித்தனர்.

இச்சமயத்தில் பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமரும் வண்டி ஒன்றில் ஏறி மைதானத்தை சுற்றி வந்தனர்.

இத்தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வைத்தே உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் பிரதமர் மோடிமைதானத்தில் ஊர்வலம் போனதாக தவறாக பரப்பப்பட்டு வருகின்றது.

பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமரும் மைதானத்தில் சுற்றி வந்த இவ்வீடியோவை பிசிசிஐ அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிகின்றது.

அதேபோல் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸும் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் இந்த ஊர்வலத்தின்போது எடுக்கப்பட்ட படத்தை பகிர்ந்திருப்பதை காண முடிகின்றது

Also Read: ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்திய கிரிக்கெட் மாபியாவிற்கு எதிரான வெற்றி என்றாரா ரிக்கி பாண்டிங்?

Conclusion

உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் பிரதமர் மோடிமைதானத்தில் ஊர்வலம் போனதாக வைரலாகும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் இவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் எட்டு மாதங்களுக்கு முன்பு மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் இந்தியா வந்தபோது நடைப்பெற்றதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Sansad TV Youtube Video, Dated March 09, 2023
X post from BCCI, Dated March 09, 2023
X post from Anthony Albanese, Dated March 09, 2023
X post from ANI, Dated March 09, 2023
Report from ANI, Dated November 19, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular