புதன்கிழமை, ஜூன் 19, 2024
புதன்கிழமை, ஜூன் 19, 2024

HomeFact CheckFact Check: சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதா விகடன்?

Fact Check: சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதா விகடன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

விகடன் குழுமத்தை சார்ந்த டைம் பாஸ் சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

டைம் பாஸ் சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதாக வைரலாகும் புகைப்படம்

இப்படத்தை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

டைம் பாஸ் சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதாக வைரலாகும் புகைப்படம்
Screengrab from Twitter@madars_paiyan
டைம் பாஸ் சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதாக வைரலாகும் புகைப்படம்
Screengrab from Facebook/raga.pradeepan
டைம் பாஸ் சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதாக வைரலாகும் புகைப்படம்
Screengrab from Facebook/V.SenthilBalajiTeam

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Factcheck / Verification

விகடன் குழுமத்தை சார்ந்த டைம் பாஸ் சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, டைம்பாஸ் இவ்வாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளதா என அறிய அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிந்தது. எடப்பாடியின் காருக்கு ஈடு கொடுத்து ஓடி வந்த பைரவர்” என்று குறிப்பிட்டு கார் பின்னால் நாய் ஒன்று ஓடி வரும் புகைப்படத்தை டைம்பாஸ் அதன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டிருந்ததது.

இப்படத்திலுள்ள எழுத்து பகுதியை, “பழனிச்சாமியின் காருக்கு ஈடுகொடுத்து ஓடி வந்த சவுக்கு சங்கர்” என மாற்றி எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.  வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து விகடன் ஆசிரியர்களுள் ஒருவரான பிரிட்டோவைத்  தொடர்புக் கொண்டு வைரலாகும் புகைப்படம் குறித்து விசாரிக்கையில், அவரும் ”அப்புகைப்படம் போலியானது, அதை நாங்கள் வெளியிடவில்லை” என்று தெளிவுப்படுத்தினார்.

Also Read: மறைந்த நடிகர் மயில்சாமிக்கு கந்துவட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் பணம் கொடுத்திருந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

விகடன் குழுமத்தை சார்ந்த டைம் பாஸ் சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Sources

Facebook Post from Time Pass Dated February 23, 2023
Phone Conversation with Britto, Vikatan, Dated February 24, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular