Fact Check
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற தவெக ஆர்ப்பாட்டம் என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Claim
லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவெகவின் ஆர்ப்பாட்டம்
Fact
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும். நியூஸ் 7 தமிழ் இது போலியானது என்று விளக்கமளித்துள்ளது.
லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவெகவின் ஆர்ப்பாட்டம் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”நேற்று சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் மரணத்தைக் கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது; வெறும் 26 நிமிடமே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மிகக் குறைந்த நேரத்தில் முடிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஆர்ப்பாட்டம் என லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘Sorry வேண்டாம் – Sorry கேளு’… குழப்புமுறும் வகையில் பதாகை பிடித்திருந்தாரா விஜய்?
Fact Check/Verification
லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவெகவின் ஆர்ப்பாட்டம் என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அப்போது, “இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிடவில்லை!” என்று அவர்களுடைய பக்கத்தில் தவெக பற்றிய இந்த நியூஸ்கார்ட் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து தவெக துணைப்பொதுச்செயலாளர் சிடிஆர். நிர்மல் குமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “ இந்த செய்தி போலியானது” என்று விளக்கமளித்தார்.
Also Read: கேரளாவில் இந்துக்களின் இசை நிகழ்ச்சியை இஸ்லாமியர்கள் தடுத்தனரா?
Conclusion
லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவெகவின் ஆர்ப்பாட்டம் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post From, News 7 Tamil, Dated July 14, 2025
Phone Conversation With, CTR Nirmal Kumar, TVK, Dated July 15, 2025