வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

HomeFact Checkஇந்திய மாணவர்களை நேரில் வந்து சந்தித்தாரா ரஷ்ய அதிபர் புதின்?

இந்திய மாணவர்களை நேரில் வந்து சந்தித்தாரா ரஷ்ய அதிபர் புதின்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

இந்திய மாணவர்களை நேரில் வந்து சந்தித்து வழியனுப்பி வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

இந்திய மாணவர்களை
Source: Facebook

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்கும் முயற்சி படிப்படியாக நடைபெற்று வருகின்ற நிலையில், அதுகுறித்த பொய்ச்செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பரவி வருகிறது.

அதில் ஒன்றாக, “போர்கால நெருக்கடியிலும் ரஷ்ய அதிபர் இந்திய மாணவர்களை நேரில் வந்து வழி அனுப்புகிறார்” என்பதாகவும், மேலும் சில தலைப்புகளுடனும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Source: Facebook

Facebook Link

இந்திய மாணவர்களை
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: எடப்பாடி பழனிச்சாமி மீது சசிகலா நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பரவுகின்ற போலி நியூஸ் கார்டு!

Fact Check/Verification

இந்திய மாணவர்களை நேரில் வந்து சந்தித்து வழியனுப்பி வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ளவரின் பின்புறம் மட்டுமே தெரியும் வகையில் வீடியோ காட்சி இடம்பெற்றிருந்தாலும் கூட அவர் ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் இல்லை என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்தது.

குறிப்பிட்ட வைரல் காட்சியில் ET NOW லோகோவும் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து, சரியாக வீடியோவில் 0.33 நொடியில் குறிப்பிட்ட நபர் தன்னை ராகுல் ஸ்ரீவத்சவா என்றும், ருமேனியாவின் இந்தியத் தூதர் என்றும் கூறுவதும் நமக்கு உறுதியானது.

எனவே, கீவேர்டுகள் மூலமாகத் தேடியபோது பிப்ரவரி 26 ஆம் தேதியன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பதிவிட்டிருந்த இந்த வைரல் வீடியோ காட்சி குறித்த செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், உக்ரைனிலிருந்து வெளியேற்றப்படும் இந்தியர்களிடம், “உங்களை காப்பாற்றி அழைத்துச் செல்ல இந்திய அரசாங்கம் இரவு, பகலாக உழைத்து வருகிறது” என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Twitter

அதே போன்று, தகவல் தொடர்பு அமைச்சமும் குறிப்பிட்ட சந்திப்பு குறித்த முழு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ராகுல் ஸ்ரீவத்சவா மாணவர்களுடன் பேசும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

Source: YouTube

இதுகுறித்து, ET Now வெளியிட்டுள்ள செய்தியையும் இங்கே இணைத்துள்ளோம்.

Source: ET Now

எனவே, குறிப்பிட்ட வைரல் வீடியோவில் இருப்பது ரஷ்ய அதிபர் அல்ல; ருமேனியாவிற்கான இந்தியத் தூதர் ராகுல் ஸ்ரீவத்சவா என்பது இதன்மூலம் தெரியவந்தது.

Conclusion

இந்திய மாணவர்களை நேரில் வந்து சந்தித்து வழியனுப்பி வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular