ஐபிஎஸ் தம்பதியினர் வருண்குமார் – வந்திதா விவாகரத்து செய்ததாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழ்நாட்டைத் தாண்டி தமிழில் பேசி கட்டணக் கழிப்பறையைக் கூட பயன்படுத்த முடியாது என்றாரா அண்ணாமலை?
Fact Check/Verification
ஐபிஎஸ் தம்பதி வருண்குமார் – வந்திதா விவாகரத்து செய்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, வருண்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
அதில் வருண்குமார் பிப்ரவரி 13, 2025 அன்று ‘நான் உனை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன். சேர்ந்ததே நம் ஜீவனே’ என்று தலைப்பிட்டு அவரது மனைவியுடன் இருக்கும் படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

இப்பதிவின் புகைப்படத்தில் ‘We divorce’ என்கிற வாசகத்தை சேர்த்தே வைரலாகும் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து தேடுகையில் வருண்குமார் வைரலாகும் தகவல் பொய்யானது என்று உறுதி செய்து வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் ஒன்று வைத்துள்ளதாக ஏபிபி நாடு செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களும் இதே செய்தியை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: உ.பி.யில் குழந்தைப்பேறு பெறுவதற்காக பெண் ஒருவரை கை, கால்களை கட்டிபோட்டு சாக்கடையில் படுக்க வைத்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?
Conclusion
ஐபிஎஸ் தம்பதி வருண்குமார் – வந்திதா விவாகரத்து செய்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் முற்றிலும் தவறானதாகும். வருண்குமார் ஐபிஎஸ் இத்தகவல் பொய்யானது என்று உறுதி செய்துள்ளார்.
இந்த உண்மையானது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post by Varunkumar IPS, Dated February 13, 2025
Report by ABP Nadu, Dated February 16, 2025