Fact Check
ஜெயலலிதா காலில் விஜய் விழுந்ததாக பரவும் எடிட் படம்!
Claim
ஜெயலலிதா காலில் விஜய் விழுந்ததாக பரவும் படம்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: தவெக மதுரை மாநாட்டுக்கு கூடிய கூட்டமா இது
Fact
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் விழுந்ததாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
அத்தேடலில் அவுட்லுக் ஊடகத்தின் இணையத்தளத்தில் தி சிங்கிள் மைண்ட் என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்டிருந்த கட்டுரையில் “Puratchi thalaivi: Whose very presence is a humbling experience” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. அப்படத்தில் தொண்டர் ஜெயலலிதா காலில் விழுவதாய் இருந்தது.

தொடர்ந்து தேடுகையில் ஒன் இந்தியா வெளியிட்டிருந்த செய்தி ஒன்றிலும் மேலே காணப்பட்ட படம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

Also Read: ராகுல் காந்தியின் பீகார் யாத்திரைக்கு கூடிய கூட்டமா இது?
இப்படத்தை வைரலாகும் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் ஜெயலலிதா காலில் விஜய் விழுந்ததாக பரப்பப்படும் படம் எடிட் செய்யப்பட்டது என உறுதியானது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.

Sources
Updated Article by Outlook, dated February 7, 2024
Media Report by One India Tamil, dated February 21, 2011