Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் சிக்கனுடன் மது அருந்தினாரா ராகுல் காந்தி? உண்மை என்ன?
பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் ராகுல் காந்தி சிக்கன் சாப்பிட்டுக்கொண்டே மது அருந்தியதாகப் பரவுகின்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

ஆளுநரின் செயலை ஒரு தமிழனாக ஆட்சேபிக்கிறேன் என்றாரா பாஜகவின் நயினார் நாகேந்திரன்?
ஆளுநரின் செயலை ஒரு தமிழனாக ஆட்சேபிக்கிறேன் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியபோது அதிகாரமாக அமர்ந்திருந்தாரா முதல்வர் ஸ்டாலின்?
ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியபோது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரமாக அமர்ந்திருந்ததாகப் பரவுகின்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

கொடநாடு பெயரை கேட்டவுடன் சட்டசபையை விட்டு வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?
சட்டசபையில் கொடநாடு என்ற பெயரை கேட்டவுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவையை விட்டு வெளியேறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக பொய் செய்தி பரப்பிய தினகரன், சத்யம் நியூஸ்!
லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)