Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: ராமர் கோயில் திறப்பதற்கு முன்பே பற்றி எரியும் உ.பி. இரயில் நிலையம்
Fact: வைரலாகும் வீடியோ கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தீவிபத்துடன் தொடர்புடையதாகும்.
ராமர் கோயில் திறப்பதற்கு முன்பாகவே பற்றி எரியும் உத்தர பிரதேச ரயில் நிலையம் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”ராமர் கோயில் திறப்பதற்கு முன்பே உ.பி. இரயில் நிலையம் எரியுதாம். அவ்வளவு ராசிகார பைய ராமன்.எனக்கு என்னமே இது சங்கிகள் வேலையா தான் இருக்கும்னு தோனுது. இத வச்சி கலவரம் பண்ண” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ்
சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!
Fact Check/Verification
ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்பாகவே உபி ரயில் நிலையத்தில் தீவிபத்து என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்து இது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
மேற்கு வங்கம், சந்தோஷ்பூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்து குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா வீடியோவுடன் கடந்த ஏப்ரல் 06, 2023 அன்று வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த ரயில் நிலைய விபத்து குறித்த வீடியோவானது Sarparast News Live உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. டெலிகிராப் இந்தியா போன்ற ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
குறிப்பிட்ட வீடியோவே தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ரயில் நிலைய தீவிபத்து என்று பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்பாகவே உபி ரயில் நிலையத்தில் தீவிபத்து என்று பரவும் வீடியோ மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பழைய நிகழ்வு என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report from Times of India, Dated April 06, 2023
Report from Telegraph India, Dated April 07, 2023
YouTube Video from Sarparast News Live
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.