Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

கேரளாவில் இந்துக்களின் இசை நிகழ்ச்சியை இஸ்லாமியர்கள் தடுத்தனரா?
கேரளாவில் இந்துக்களின் இசை நிகழ்ச்சியை இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.

கல்வியை விட பக்திதான் முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
கல்வியை விட பக்திதான் முக்கியம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

மெரினா கடற்கரை விமான நிலையம் அமைக்க சரியான இடம் என்று கூறினாரா தவெக தலைவர் விஜய்?
மெரினா கடற்கரை விமான நிலையம் அமைக்க சரியான இடம் என்று தவெக தலைவர் விஜய் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.

விஜய் மற்றும் திரிஷாவின் பழைய படம் என்று பரவும் எடிட் படம்!
விஜய் மற்றும் திரிஷாவின் பழைய படம் என்று பரவும் படம் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை (AI) பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட போலியான படமாகும்.

பாஜக அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாரா அஜீத் குமார் மீது புகாரளித்த நிகிதா?
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகிதா என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.