Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

மத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்று பரவும் கனடா வீடியோ!
மத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்று பரவும் வீடியோ கனடாவில் எடுக்கப்பட்டதாகும்.

பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக பரவும் எடிட் படம்!
பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்ட வாகனங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்ட தங்க வாகனங்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்றாரா அண்ணாமலை?
பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!
பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவானது 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய வீடியோவாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)