இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் நிறுத்தம்?
பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்றாரா பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்?
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கூட்டணி கட்சிகளால் பயனில்லை என்றாரா துரைமுருகன்?
கூட்டணி கட்சிகளால் பயனில்லை என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

துபாயின் புர்ஜ் கலிபாவில் முஷ்கானின் புகைப்படம் இடம்பெற்றதா?
துபாயின் மிக உயர்ந்த புர்ஜ் கலிபா கட்டிடத்தில் கர்நாடகாவில் அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு பிரபலமான முஷ்கானின் பெயர் மற்றும் புகைப்படம் ஒளிர்ந்து அவர் கெளரவிக்கப்பட்டார் என்பதாக பரவுகின்ற வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

தளபதி ஸ்டாலின் பிரதமரான பிறகு வேண்டுமானால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்றாரா அமைச்சர் கே.என்.நேரு?
தளபதி ஸ்டாலின் பிரதமரான பிறகு வேண்டுமானால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)