இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

கோழிகள் அதிக புழுக்களைத் தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் என்றாரா அமைச்சர் அன்பில் மகேஷ்?
கோழிகள் அதிக புழுக்களைத் தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் இருந்திருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என்றாரா அண்ணாமலை?
பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

முதல்வர் ஸ்டாலினை இழிவாக பேசினாரா பாஜக பேச்சாளர் நாராயணன் திருப்பதி?
நாராயணன் திருப்பதி தமிழக முதல்வர் ஸ்டாலினை இழிவாக பேசியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை என்றாரா உதயநிதி ஸ்டாலின்?
மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை என்பதாக திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

மோடி தமிழகத்திற்கு வரும்போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றாரா பாஜகவின் எஸ்.ஆர்.சேகர்?
மோடி தமிழகத்திற்கு வரும்போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்,சேகர் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)