இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

பொங்கல் பரிசை குற்றம் சுமத்துபவர்களுக்கு நன்றி இல்லை; இலவசமாக வழங்குவதை குறை சொல்லக் கூடாது என்றாரா அமைச்சர் சக்கரபாணி?
பொங்கல் பரிசை குற்றம் சுமத்துபவர்களுக்கு நன்றி இல்லை; இலவசமாக வழங்குவதை குறை சொல்லக் கூடாது என்று அமைச்சர் சக்கரபாணி கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவைகளாகும்.

தமிழர்களுக்கு தேசபக்தி இல்லை என்றாரா தமிழக பாஜக சமூக ஊடக அணித்தலைவர் நிர்மல் குமார்?
தமிழர்களுக்கு தேசபக்தி இல்லை என்று தமிழ்நாடு பாஜக சமூக ஊடக அணித்தலைவர் நிர்மல் குமார் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

தமிழக அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை இடம்பெற்றதால் நிராகரிக்கப்பட்டதா?
தமிழக அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை இடம்பெற்றதால் நிராகரிக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானதாகும்.

அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட காங்கிரஸ் பற்றிய கேலிச்சித்திரமா இது? உண்மை என்ன?
அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட காங்கிரஸ் பற்றிய கேலிச்சித்திரம் என்பதாக வைரலாகும் கார்ட்டூன் புகைப்படச் செய்தி தவறானதாகும்

`ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கப்பட மாட்டாது’ என்றாரா அன்பில் மகேஷ்?
திமுக ஆட்சியில் இருக்கும் வரை ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று அன்பில் மகேஷ் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)