ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஉ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தகாத பாலியல் உறவில் ஈடுபட்டதாக பரவும் வதந்தி!

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தகாத பாலியல் உறவில் ஈடுபட்டதாக பரவும் வதந்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: உ.பி. முதல்வர் யோகி ஆதித்நாத் தகாத பாலியல் உறவில் ஈடுபட்டார்.

Fact: வைரலாகும் தகவல் தவறானதாகும். புனைவு வீடியோ ஒன்றின் காட்சிகளை வைத்து இந்த பொய் தகவல் பரப்பப்படுகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த சம்பவம்  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், “சந்நியாசிகள் வயதில் சிறியவராக இருந்தாலும் அவர்களது காலில் விழுவது என் பழக்கம்” என்று சம்பவம் குறித்து விளக்கமளித்திருந்தார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து யோகி ஆதித்யநாத் பெண் ஒருவருடன் தகாத பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறி புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

Screengrab from Twitter@HemeedShah29842

Twitter Link | Archived Link

Screengrab from Facebook/shiva.shankari.549

Facebook Link

Screengrab from Facebook/Selvaraj Santha

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நிலவில் இந்திய தேசிய சின்னம் பதிக்கப்பட்டதாகப் பரவும் வரைகலை புகைப்படம்!

Fact Check/Verification

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தகாத பாலியல் உறவில் ஈடுபட்டதாக பரப்பப்படும் புகைப்படங்களில் யோகி ஆதித்யநாத் இருக்கும் புகைப்படத்தை தவிர்த்து மற்ற மூன்று படங்களிலும் அதில் உள்ள நபர்களின் முகங்கள் தெரியாதவாறு தெளிவற்று இருந்தது.

ஆகவே உண்மையாகவே அப்படங்களில் இருப்பவர் யோகிதானா என்பதை உறுதி செய்ய அப்படங்களை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆராய்ந்தோம்.

அத்தேடலில் இப்படங்களானது புனைவு வீடியோ ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது என அறிய முடிந்தது. அவ்வீடியோவானது டெய்லிமோஷன் தளத்தில் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்நாத் தகாத பாலியல் உறவில் ஈடுபட்டதாக பரப்பப்படும் தகவல்
Screengrab from Dailymotion

தொடர்ந்து தேடியதில் இன்டெர்நேஷ்னல் பிஸ்னஸ் டைம்ஸில் மார்ச் 21, 2017 அன்று ‘BJP Yuva Morcha files complaint against activist Prabha Belavangala for morphing obscene pictures of UP CM Yogi Adityanath’ என்று தலைப்பிட்டு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் பிரபா என்பவர் வைரலாகும் இப்படங்களை அவரது சமூக பக்கத்தில் பகிர்ந்திருந்ததால் பாஜகவினர் அவர் மீது புகாரளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.  

உஜ்ஜவால் பிரபாத் எனும் இணைய ஊடகத்திலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியிலும் வைரலாகும் இப்புகைப்படங்கள் புனைவு வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.

Also Read: சந்திரயான் எடுத்த படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப்போவதாக பரவும் தவறான தகவல்!

Conclusion

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தகாத பாலியல் உறவில் ஈடுபட்டதாக பரப்பப்படும் புகைப்படங்களில் இருப்பது யோகி ஆதித்யநாத் அல்ல; அது சித்தரிக்கப்பட்ட வீடியோவில் நடித்த நடிகர் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Dailymotion video from DubsmashTelugu Official
Report from International Business Times, Dated March 21, 2017

Report from Ujjawal Prabhat, Dated July 03, 2018


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular