இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்ததாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் மன்னராக முடிசூட்டிய பிறகு முதன்முதலாக அவரது அதிகாரப்பூர்வ உருவப் படத்தை திறந்த நிகழ்வின் வீடியோவை எடிட் செய்தே அவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபாகரன் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் சிலரை ஒற்றைப் பனைமரம் அம்பலப்படுத்தும் என்று ஒற்றைப் பனைமரம் திரைப்படத்தின் இயக்குநர் புதியவன் ராசையா கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவை.